ஜெயிலர் 2 படத்தில் நெல்சனுக்கு இவ்வளவு சம்பளமா? கேட்டா ஆடிப்போவீங்க..
Jailer 2 Director Nelson Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அந்த வகையில் இந்த படத்தை இயக்க இயக்குனர் நெல்சனுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?
Jailer 2 Director Nelson Dilipkumar Salary : தமிழ் திரையுலகிற்கு வந்த புதிதிலேயே தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர், நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இப்படம் பெரிய ஹிட் அடிக்க, தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். இப்படத்திற்கு பிறகு அவர் ரஜினிகாந்துடன் கைக்கோர்த்த படம்தான், ஜெயிலர்.
ஜெயிலர் திரைப்படம்:
நடிகர் விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம், டிரைலரில் ஏற்படுத்திய சுவாரஸ்யத்தை படத்தில் ஏற்படுத்த தவறியது. நெகடிவான விமர்சனங்களால் வருத்தெடுக்கப்பட்டாலும் இப்படம் நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனையே பெற்றது. இதனால், அவர் அடுத்த ரஜினிகாந்துடன் கமிட் ஆன ஜெயிலர் திரைப்படம் அவர் கையை விட்டு நழுவும் நிலையில் இருந்தது. ஆனால், வேறு எதையும் யோசிக்காமல் சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் உருவான ஜெயிலர் (Jailer) பட வேலைகளில் இறங்கினார்.
ஜெயிலர் படம் வெளியான போது, ‘என்னாகுமோ, ஏதாகுமோ’ என்று ரஜினி (Rajinikanth) ரசிகர்கள் அனைவரும் கலக்கத்தில் இருந்தனர். ஆனால், ஒரு வழியாக படம், நல்ல விமர்சனங்களை பெற்று வென்று விட்டது. இப்படத்தில் முன்னாள் ஜெயிலர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த், தனது 70களிலும் ஆக்ஷனில் கலக்கியிருந்தார். இந்த படத்தில் காமியோ கதாப்பாத்திரத்தில் தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மொத்தம் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.
ஜெயிலர் 2 படத்தின் வேலைகள்:
ஜெயிலர் படம் வெளியான போதே, அப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என கூறப்பட்டது. இதிலும் ஹீரோவாக ரஜினிகாந்த்தான் நடிக்கிறார். இவருடன் இன்னும் சில முக்கிய நடிகர்கள், இப்படத்தில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
இதுதானா டைட்டில்?
சமீபத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியானது. அதன்படி ஜெயிலர் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த ஹுக்கும் (Hukum) பாடல் ஹிட் அடித்ததை தொடர்ந்து, இந்த பாகத்திற்கு அந்த பெயரைத்தான் நெல்சன் வைக்க உள்ளதாக கூறப்பட்டது.
சம்பளம் இவ்வளவா?
இந்நிலையில் தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு, ரஜினிகாந்த் ஜெயிலர் 2 -வில் இணைவார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. பெரிய பொருட் செலவில் உருவாகும் ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு ரூ 60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r