சென்னை: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் நாகசைதன்யா நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இருமொழிகளில் உருவாகும் ‘கஸ்டடி’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புது வருடத்தை ஒட்டி வெளியான படத்தின் க்ளிம்ப்ஸில் நாக சைதன்யாவின் அசுரத்தனமான கதாபாத்திர அவதாரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது படப்பிடிப்பு அதனுடைய கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரத்தை ரேவதி என படக்குழு அறிவித்துள்ளது. அவரது கதாபாத்திரத்திற்கான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு, ‘அழகும் திறமையும் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி ‘கஸ்டடி’ படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.  



இந்த போஸ்டர் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரம் கதையில் எந்த அளவுக்கு வலுவானதாக இருக்கப் போகிறது என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர். 


மேலும் படிக்க | 2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்


அக்கினேனி இதுவரை கதாநாயகனாக நடித்தப் படங்களிலேயே ‘கஸ்டடி’ அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும் படம். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 


பிரம்மாண்டமான பொருட்செலவு மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் இந்தப் படம் தயாராகி வருகிறது. பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி படத்தின் வசனம் எழுத எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். 
உலகம் முழுவதும் ’கஸ்டடி’ திரைப்படம் திரையரங்குகளில் மே 12, 2023-ல் வெளியாகிறது. 


மேலும் படிக்க | மீண்டும் ஹீரோ ஆகும் சதீஸ்! இயக்குனர் யார் தெரியுமா?


படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:


கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவன்குமார்,
இசை: மாஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்,
படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்,
வசனம்: அபூரி ரவி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்,
ஆக்‌ஷன்: ஸ்டண்ட் சிவா, மகேஷ் மாத்யூ,
கலை இயக்குநர்: DY சத்யநாராயணா,
மக்கள் தொடர்பு: வம்சி சேகர், சுரேஷ் சந்திரா, ரேகா Done,
மார்க்கெட்டிங்: விஷ்ணு தேஜ் புட்டா


மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ