கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழா நடைபெற்றது. அதில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். இந்தக் கடை பெண்களுக்கான அனைத்து விதமான பிராண்டுகளின் உள்ளாடைகளும் கிடைக்கும் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடையைத் திறந்து வைத்து ஆண்ட்ரியா பேசும்போது,"நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன். இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. இது மாறிவரும் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒன்று. இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது. ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்." என்றார். 


மேலும் படிக்க | 'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்


கூலி:


 



ஆண்ட்ரியாவிடம் ஒரு நிருபர் ஹேமா கமிஷன் பற்றியும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதை பற்றி ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு "அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் "என்று தவித்துவிட்டார். நோ கமெண்ட்ஸ் என்பது அவரது பதிலாக இருந்தது குறித்து நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எப்போதும் தைரியமாக கருத்துக்களை வெளியிடும் ஆண்ட்ரியா இப்படிக் கூறியது நிருபர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. இந்த கடைத் திறப்பு விழாவினை ஒட்டி ஏராளமான பிரமுகர்கள் வந்து இதன் நிறுவனர் ஹனீப் அவர்களுக்கும் புதிய நிறுவனத்திற்கும் வாழ்த்து தெரிவித்தனர்.


மேலும் படிக்க | Coolie Cast : கூலி படத்தில் புதிதாக இணையும் ‘அந்த’ இந்தி நடிகர்!! யாருன்னு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ