திரையரங்கில் கண்கலங்கிய ’டான்’ இயக்குநர் - வீடியோ
டான் திரைப்படத்தின் இயக்குநர் திரையரங்கில் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான ’டான்’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் காதல், காமெடி மற்றும் எமோஷன் என அனைத்தும் இருப்பதால் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மழை பொழிகிறது. தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை ரிலீஸான சிவகார்த்திகேயன் படங்களில் அதிக பாக்ஸ் ஆஃபீஸ் வசூலைக் கொண்ட படமாகவும் இருந்து வருகிறது.
மேலும் படிக்க | விக்ரம் புரோமோஷனுக்கு பிரபல யூ டியூப் சேனலில் களமிறங்கும் கமல்ஹாசன்
படம் வெளியாவதற்கு முன்பே இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என சமுத்திரக்கனி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் அடித்துக் கூறினர். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்ன வேண்டும்? என்பதில் தெளிவாக இருந்து இந்தப் படத்தை இயக்கியிருப்பதால், ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனவும் தெரிவித்தனர். அவர்கள் கூறியதுபோலவே, தியேட்டர்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக ‘டான்’ ஓடிக் கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வரவேற்பு இருப்பதால், இந்த வார இறுதியில் எதிர்பார்ப்புக்கு மேலான வசூலை ஈட்டும் என்றும், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் திரைவட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவைப் பார்த்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. படம் முடிவில் இயக்கம் ‘சிபி சக்கரவர்த்தி’ என வரும்போது திரையரங்கில் இருக்கும் ரசிகர்கள் கூச்சலிடுவதை, நேரில் பார்க்கும் அவர், தன்னை அறியாமல் நெகிழ்ந்து கண் கலங்கிவிடுகிறார். இந்த வீடியோ காண்போரின் மனதையும் நெகிழவைக்கிறது. இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு இதுதான் முதல் படம். அவரை நம்பி கதைக்கு ஒப்புதல் தெரிவித்த சிவகார்த்திகேயன், தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் அந்த படத்தையும் இயக்க முன்வந்தார். அவரின் இந்த முயற்சிக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | சினிமாவில் இருந்து விலகுகிறேன் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR