விக்ரம் புரோமோஷனுக்கு பிரபல யூ டியூப் சேனலில் களமிறங்கும் கமல்ஹாசன்

விக்ரம் பட புரோமோஷனுக்காக பிரபல தமிழ் யூ டியூப் சேனலான ‘வில்லேஜ் குக்கிங்’ சேனலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2022, 10:09 AM IST
  • விக்ரம் படத்துக்கு வித்தியாசமான புரோமோஷன்
  • வில்லேஜ் குக்கிங் சேனலில் கமல்ஹாசன்
  • விரைவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி
விக்ரம் புரோமோஷனுக்கு பிரபல யூ டியூப் சேனலில் களமிறங்கும் கமல்ஹாசன் title=

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரும் நடிப்பில் மிரட்டியிருக்கின்றனர். சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக விக்ரம் டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க | கமலுடன் இணையும் பா. இரஞ்சித் - விக்ரம் ஆடியோ லான்ச்சில் மாஸ் அப்டேட்

இதில் விக்ரம் படத்தின் ஒட்டு மொத்த குழுவினரும் கலந்து கொண்டனர். படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின், பா. ரஞ்சித் மற்றும் சிம்பு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டி கலக்கலான நடனம் ஆட, அவருடன் சேர்ந்து கமலும் ‘பத்தல பத்தல’ பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, கமல்ஹாசனின் ஒரு ரசிகனான இருந்து இந்தப் படத்தை எடுத்ததாகவும், உழைப்பு முழுவதையும் கொடுத்து சிறப்பான படத்தை கமல்ஹாசனுக்கு கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின், அரசியலில் இருந்தாலும் ஆண்டு இதுபோன்று ஒருபடத்தை கமல்ஹாசன் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பா.ரஞ்சித் பேசும்போது, விருமாண்டி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறினார். கமல்ஹாசனை வைத்து படம் இயக்க தயராக இருப்பதாக கூறி அரங்கை அதிர வைத்தார். அனிரூத்தின் பாடல் மற்றும் ஃபர்மாமென்ஸ் ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

இப்படி கலகலப்பாக விக்ரம் ஆடியோ மற்றும் டிரெய்லர் ரிலீஸ் முடிவடைந்திருக்கும் நிலையில், புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் தமிழில் பிரபல யூடியூப் சேனலாக இருக்கும் வில்லேஜ் குக்கிங் குழுவினர் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த சேனலில் விக்ரம் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வில்லேஜ் குக்கிங் குழுவினருடன் கமல்ஹாசன் கலந்து கொண்ட புரோமோஷன் நிகழ்ச்சி முடிந்துவிட்டதாகவும், விரைவில் வீடியோ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் குறித்து லீக்கான தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News