இந்தி மொழில் காமெடி டிராமாவாக உருவாகியுள்ள படம், டன்கி. இதில், ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை, ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கிறார். ஷாருக்கான், தாப்சி, விக்கி கௌஷல், போமன் இரானி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். ஷாருக்கான் படம் என்றாலே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவர், தமிழ் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளதால், இந்த படத்திற்கு தமிழ் நாட்டிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர், தங்களது விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டன்கி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்..


‘பழைய கதை..’


டன்கி படத்திற்கு விமர்சனம் கொடுத்துள்ள ரசிகர் ஒருவர் படத்தின் கதை ஏற்கனவே பார்த்து பழகி போனது போல உள்ளதாகவும் இந்த படத்தை ஹிரானினியின் உதவி இயக்குநர்கள் இயக்கியது போல இருப்பதாகவும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். 



மேலும், இந்த படத்தை தென்னிந்தியாவில் வெளியிட்டிருந்தால் சரியான கதை இல்லாததை வைத்து ரசிகர்கள் விமர்சனத்தாலேயே வசைபாடியிருப்பார்கள் என்றும், ஒரு லைன் கதையை 3 மணி நேரத்திற்கு படமாக எடுத்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா..! வெயிட் பார்டிதான் போல


ஷாருக்கானை ஓவர் டேக் செய்த விக்கி..


ஒரு ரசிகர், படம் சுமாராக இருப்பதாக விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுவரை வெளிவந்த ஹிரானியின் படங்களிலேயே இதுதான் மிகவும் வீக்கான படம் என்று இந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். 



மேலும், முதல் பாதியில் வந்த விக்கி கௌஷலின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் ஷாருக்கானின் பஞ்சாபி மொழி எரிச்சலூட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை தவிர படத்தில் பாராட்டும்படி எதுவும் இல்லை என்று இந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். 


‘காட்சிகள் அருமை..’


ஒரு ரசிகர், மனதுக்கு இதமான நட்பு, காதல், மண்ணின் மீதுள்ள பாசம், நாட்டுப்பற்று என அனைத்தையும் படம் நன்றாக காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 



மேலும், படத்தின் இறுதிக்காட்சி நன்றாக இருப்பதாகவும் நீதிமன்ற காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். 


‘ஏமாற்றிவிட்டது...’


ஒரு ரசிகர், ஹிரானிக்காகத்தான் டன்கி படத்தை பார்க்க வந்ததாகவும் ஆனால் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளார். 



மேலும், படத்தில் காமெடி நன்றாக வர்க்-அவுட் ஆகவில்லை என்றும் இது பெரும் வருத்தமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | பொங்கலுக்கு இந்த 3 படங்கள் மட்டும் தான் ரிலீஸ்! தள்ளிபோகும் படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ