ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் மலையாள நடகரான பகத் பாசிலும் இன்னொரு இந்தி நடிகரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைவர் 170:


‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் பெயர் சூட்டப்படாமல் இருக்கும் இந்த படத்தினை டி.ஜே ஞானவேல் ராஜா இயக்குகிறார். பயணம், ஜெய் பீம் உள்ளிட் படங்களை இயக்கி பிரபலமானவர் இவர். இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தலைவர் 170 படத்திற்கான லுக் டெஸ்டிங் நடைப்பெற்றது. இதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு பிரபலமான சிகை அலங்கார நிபுணர் ஒருவர் மேக்-ஓவர் கொடுத்திருந்தார். அவர் தன் டிவிட்டர் பக்கத்திலும் ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். 


மேலும் படிக்க | ரஜினிக்கு 150 கோடி! அப்போ தமன்னாவிற்கு எத்தனை கோடி? ஜெயிலர் படக்குழுவின் சம்பள விவரம்..!


பகத் பாசில்..!


மலையாள நடிகரான பகத் பாசில், தமிழ் சினிமா ரசிகர்களிடையே நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்த பிறகு பிரபலமானார். மலையாளத்தில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அதற்குறிய அங்கீகாரங்களையும் பெற்றவர் இவர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனங்களில் இவர் இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. சூப்பர் டீலக்ஸ், விக்ரம் ஆகிய படங்களில் நடித்திருந்த இவர், அடுத்து மாமன்னன் படத்தில் ரத்னவேலு என்கிற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 


சூப்பர் ஸ்டார்களுடன் பகத் பாசில்..? 


நடிகர் பகத் பாசில், ரஜினிகாந்துடன் அவரது 170ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களுடனும் பகத் பாசில் நடிக்கவுள்ளதாக நேற்றிலிருந்து சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இவர் மட்டுமன்றி, மற்றுமொரு பெரிய நடிகரும் படத்தில் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். 


இந்த நடிகரும் இருக்கிறாரா..? 


சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்ற ‘தசரா’ படத்தில் நாயகனாக நடித்திருந்தவர், நானி. 2012ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘நான் ஈ’ (ஈகா) படத்தின் நாயகன் இவர். தமிழில் சிவகார்த்திகேயன் எப்படியோ, தெலுங்கு ரசிகர்களுக்கு அப்படிப்பட்டவர் நானி. இவரும் ரஜினிகாந்துடன் அவரது 170ஆவது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது சீதா ராமம் பட நாயகியான மிருணாள் தாகூருடன் இணைந்து அவரது 30வது படத்தில் நடித்து வருகிறார். 


தமிழ் படங்களில் பிற மொழி நடிகர்கள்..!


பிற மொழிகளில் தமிழ் நடிகர்கள் நடிப்பதை விட கோலிவுட் படங்களில் பிற மொழி நடிகர்கள் நடிப்பது தற்போது வாடிக்கையாகி விட்டது. ரஜினிகாந்த் நடிப்பில் சில தினங்களில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில் என ஒரு பான் இந்திய நடிகர்களின் சங்கமமே உள்ளது. இதற்கு முன்னர் பிகில் படத்தில் ஜாக்கி ஷ்ராஃப் நடித்திருந்தார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். இவர் மட்டுமன்றி, பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் மட்டுமன்றி இளம் மலையாள நடிகரான மாத்யூ தாமஸ் நடித்திருக்கிறார். இதற்கு காரணம், தமிழ் சினிமா தமிழ் நாட்டைத்தாண்டி இந்தி திரையுலக ரசிகர்களையும் ஈர்த்துள்ளது என்பதுதான். தலைவர் 170 படத்திலும் இதேதான் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | ஜெயிலர் படம் எப்படி இருக்கு..? படம் பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ