Fact Check: இளம் நடிகரை திருமணம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..?

Aishwarya Rajinikanth: பிரபல நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு பிரபலமான இளம் நடிகரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jul 11, 2023, 04:52 PM IST
  • ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா.
  • கடந்த ஆண்டு நடிகர் தனுஷை பிரிந்தார்.
  • இவர் ஒரு இளம் நடிகரை காதலித்து வருவதாக தகவல்.
Fact Check: இளம் நடிகரை திருமணம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..?  title=

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான இவர், நடிகர் தனுஷை 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவரும் தனுஷும் தங்களது பிரிவை அறிவித்ததை தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவு:

‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்து தனுஷ் அப்போதுதான் திரையுலகிற்குள் எண்ட்ரி ஆகியிருந்தார். அந்த படத்தின் ‘ஸ்பெஷல்’ காட்சியில்தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இருவரும் காதலித்து வருவதாக பேச்சு எழுந்தது. ஆரம்பத்தில் இதை தனுஷ் மறுத்தாலும், இவர்களது திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றது. பின்பு, தனுஷ்-ஐஸ்வர்யாவின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி நடைப்பெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா, தனது கணவரை வைத்து 3 என்ற படத்தை எடுத்தார். சுமார் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிய உள்ளதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டனர். இந்த விஷயம், ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இந்த விவாகரத்திற்கு ஏராளமான காரணங்களும் ரசிகர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?

விவாகரத்திற்கான காரணம் என்ன?

தனுஷ்-ஐஸ்வர்யாவிற்கு அவர்களது 20களிலேயே திருமணம் நடைப்பெற்று விட்டது. மிகவும் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டதால் இருவருக்கும் இத்தனை வருடங்கள் கழித்து பக்கும் வந்த பிறகு பிரிந்து விட்டதாக சில  ரசிகர்கள் விமர்சித்தனர். தனுஷ் இயக்கும்-நடிக்கும் படங்களில் அவருடன் பணிபுரிந்த பல நடிகைகளின் திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன. அதற்கு காரணம், தனுஷுடன் அவர்கள் நட்பு பாராட்டியதுதான் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறத்து யாருக்கும் தெரியாது. 

இளம் நடிகருடன் ஐஸ்வர்யா காதல்? 

நடிகை ஐஸ்வர்யா, தற்போது தன் தந்தையை வைத்து ஒரு படத்தை இயக்கி பிசி இயக்குநராக வலம் வருகிறார். இவர், தற்போது ஒரு இளம் நடிகருடன் காதல் உறவில் உள்ளதாகவும் இவர்கள் அடிக்கடி வெளியில் தென்படுவதாகவும் பேசப்படுகிறது. அந்த இளம் நடிகர் யார் என்பதைதான் ரசிகர்கள் இணையதளம் முழுவதும் தேடி வருகின்றனர். ஆனால் அவர் யார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அந்த நடிகரைத்தான் ஐஸ்வர்யா திருமணம் செய்ய உள்ளதாகவும் சிலர் கூறிவருகின்றனர். 

லால் சலாம்:

3 படம் மூலம் தன்னை திறமைமிகு இயக்குநர் என நிரூபித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது ‘லால் சலாம்’ பட பணிகளில் பிசியாக உள்ளார். இந்த படத்தில் விஷால் விஷ்ணு மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இதில் காமியோ ரோலில் ‘மொய்தீன் பாய்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் லால் சலாம் படமும் ஒன்று. 

தனுஷின் அடுத்த படம்:

தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தனுஷ் தனது 50 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இதற்காக மொட்டை கெட்-அப்பும் போட்டுள்ளார். இந்தியில் தனக்கு முதல் படமாக அமைந்த ‘ராஞ்சனா’ படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் இன்னொரு படத்திலும் தனுஷ் கைக்கோர்த்துள்ளார். 

மேலும் படிக்க | பிரபல நடிகையின் காதல் கணவர் மீது பண மோசடி வழக்குப்பதிவு…!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News