நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல சீரியல் நடிகை! யார் தெரியுமா?
நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் சீரியல் நடிகை ஒருவர் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர்களுள் ஒருவர், கார்த்தி. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனாகவும், நடிகர் சூர்யாவின் தம்பியாகவும் இருக்கும் இவர், கடைசியாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார்.
17 வருட திரைவாழ்க்கையை பூர்த்தி செய்த கார்த்தி..
நடிகர் கார்த்தி, பருத்தி வீரன் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். அதற்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார். அப்படியே படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட் அடித்திருந்தாலும், அதற்கு ஈடான ஒரு சில படங்கள் பெரும் தாேல்வியை தழுவின.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில், கடந்த 10ஆம் தேதி ஜப்பான் படம் வெளியானது. இது, அவரது 25வது படமாகும். இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கியிருந்தார். கார்த்தியுடன் சேர்ந்து, வைகை சந்திரசேகர், பவா செல்லதுரை, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரிலீஸிற்கு முன்னர் இப்படத்தின் மீது பலருக்கு அதீத எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் ரிலீஸிற்கு பிறகு அவை அனைத்தும் புஸ் என்று மாறியது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.
27வது படம்..
நடிகர் கார்த்தி, தற்போது தொடர்ந்து 4-5 படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில் ஒரு படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். இவர், 2018ல் வெளியான ‘96’ படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இப்படம், கார்த்தியின் 27வது படமாகும்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: டேஞ்சர் லிஸ்டில் முக்கிய போட்டியாளர்கள்-இந்த வாரம் எவிக்ட் ஆவது யார்?
கார்த்திக்கு ஜாேடியாக சீரியல் கதாநாயகி..
பிரேம் குமார் இயக்கும் கார்த்தியின் 27வது படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு சீரியல் நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடராக ஒளிபரப்பாகி வருவது, ஈரமான ரோஜாவே 2. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் பிரியா எனும் கதாப்பாத்திரத்தில் ஸ்வாதி என்பவர் நடிக்கிறார். இவர்தான், தற்போது கார்த்திக்கு ஜோடியாக படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னரும் பல சீரியல் நாயகிகள் தமிழ் சினிமாவிற்குள் பிரவேசம் செய்துள்ளனர். குறிப்பாக, செய்தி வாசிப்பாளராக இருந்து, கல்யாணம் முதல் காதல் வரை தாெடர் மூலம் சீரியல் நடிகையாக மாறியவர், பிரியா பவானி சங்கர். இவருக்கு இந்த தொடர் மூலம் மெல்ல மெல்ல சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கியது. தற்போது இவர், தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதே போல, நடிகை ஸ்வாதியும் கோலிவுட் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மன்றாடி மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்! த்ரிஷா கொடுத்த மாஸ் ரிப்ளை! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ