கார்த்தி படத்தில் இணையும் அரவிந்த் சுவாமி? அதுவும் இந்த இயக்குனரின் படத்திலா?

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படம் விரைவில் வெளியாக உள்ளது.  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கிலிம்ப்ஸ் அனைவரையும் கவர்ந்தது.

 

1 /5

தென்னிந்திய திரையுலகில் கார்த்தி முக்கிய நடிகராக உள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது.  இதனை தொடர்ந்து நலன் குமாரசாமியுடன் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.    

2 /5

இது தவிர 'கார்த்தி 27' படத்தில் இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி கைகோர்க்க உள்ளார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த '96' படத்தை இயக்கியவர் பிரேம்.   

3 /5

இந்த படத்தில் பிரபல நடிகர் அரவிந்த் ஸ்வாமிவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

4 /5

எல்லாம் சரியாக நடந்தால் கார்த்தி 27 படத்தில் அரவிந்த் சுவாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.   

5 /5

கார்த்தி 27 படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது.  சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என கூறப்படுகிறது.