பிக்பாஸ் 7: டேஞ்சர் லிஸ்டில் முக்கிய போட்டியாளர்கள்-இந்த வாரம் எவிக்ட் ஆவது யார்?

Bigg Boss 7 Tamil Eviction: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் இருந்து முக்கிய போட்டியாளர்கள் சிலர் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 24, 2023, 03:36 PM IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 8 பேர் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
  • முக்கிய போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாக தகவல்.
  • அவர்கள் யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் 7: டேஞ்சர் லிஸ்டில் முக்கிய போட்டியாளர்கள்-இந்த வாரம் எவிக்ட் ஆவது யார்?  title=

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் போட்டி, பிக்பாஸ் சீசன் 7. இப்போட்டியில் இருந்து இந்த வாரம் முக்கிய போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 7:

ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்று ஆரம்பித்த பிக்பாஸ் போட்டி பல ஆண்டுகளாக இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இதே போல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிக்பாஸ் போட்டி தொடங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு தமிழ் மொழியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை, ஒவ்வொரு சீசனிற்கும் விதிமுறைகளும், போட்டி நடத்தப்படும் முறைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில், இந்த சீசனிலும் பல புது விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிக்பாஸ் இல்லத்தில் ஸ்மால் பாஸ் என்ற புதிதாக ஒரு வீடு பிரிக்கப்பட்டது. கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு சில வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 6 பேர் ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சமையல் வேலை கொடுக்கப்படுகிறது. வைல்ட் கார்ட் எண்ட்ரி, பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம், விசித்ராவின் வாழ்க்கையில் பூகம்பம், பழைய பிக்பாஸ் போட்டியாளர்களின் வைல்ட் கார்ட் எண்ட்ரி என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 

டேஞ்சர் லிஸ்டில் இரண்டு போட்டியாளர்கள்..

இந்த வாரம், பிக்பாஸ் பாேட்டியாளர்கள் 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். பலமான போட்டியாளர்களாக கருதப்படும் வி.ஜே.அர்ச்சனா, விசித்ரா, பூர்ணிமா, மாயா உள்ளிட்டோரும் இதில் அடக்கம். இதில் சில வீக் ஆன போட்டியாளர்களும் உள்ளனர். அவர்கள்தான் ஆர்.ஜே பிராவோ மற்றும் நடிகை அக்‌ஷயா. இவர்கள் இருவரும் வீக் ஆன போட்டியாளர்களாக இருந்தாலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். 

மேலும் படிக்க | கமல்ஹாசனை கட்டித்தழுவிய ரஜினி! என்ன விஷயம் தெரியுமா?

இவர்கள் இருவரும்தான் தற்போது மிகவும் குறைவான வாக்குகள் பெற்றவர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருவரில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் கூட இருக்கலாம் எனவும் மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழைந்து, மூன்று பழைய பிக்பாஸ் போட்டியாளர்கள் வெளியேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

தலைத்தூக்கிய விசித்ராவின் விவகாரம்-சிக்கிய பிரபல நடிகர்..

நடிகை விசித்ரா, 90களில் தென்னிந்திய திரையுலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கின் போது தான் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை தெரிவித்திருந்தார். 2000ஆம் ஆண்டில், தமிழ் அல்லாத பிற மொழி படத்தில் நடிக்க ஒத்திகைக்காக வெளிமாநிலத்திற்கு சென்ற போது ஒரு நடிகர் தன்னை ரூமுக்கி வருமாறு அழைத்ததாக கூறினார். முடியாது என இவர் மறுத்த போது ஒரு சிலர் இவரது ரூம் கதவை தட்டி இரவில் தொந்தரவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து படத்தில் வேலை பார்க்கும் முக்கிய ஆளிடம் தெரிவித்த பாேது, அவரும் தன்னை அறைந்ததாக கூறினார். இது குறித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், 22 வருடங்களாக திரைத்துறையை விட்டு விலகியிருந்ததாக தெரிவித்திருக்கிறார். 

விசித்ரா குறிப்பிட்டபடி 2000ஆம் அண்டில் அவர் நடித்த தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தது பாலைய்யா. இவர்தான் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | லியோ to சித்தா-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News