சின்னத்திரை நடிகையான விஜே சித்ராவின் மரணம் நிகழ்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனாலும் அவரது மரணம் தொடர்பான சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. சித்ரா தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் சித்ராவின் குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன்புகூட கூறியிருந்தனர்.


                                                             


சித்ராவின் மரணம் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேரளாவைச் சேர்ந்த சஹானா எனும் சுமார் 20 வயதே ஆன இளம் சீரியல் நடிகை, சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில் அவரது கணவரிடம் விசாரணை நடந்துவருகிறது.


                                                                         


சஹானாவின் மரணம் நிகழ்ந்த சுவடு மறைவதற்குள்ளாக மற்றொரு சீரியல் நடிகையான பல்லவி தேய் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது கொல்கத்தாவில். பல்வேறு சீரியல்களில் நடித்துப் பிரபலமானவரான பல்லவி, சாக்னிக் சக்ரபோர்த்தி எனும் நபருடன் ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்துவந்ததாகக் கூறப்படுகிறது.


                


இந்த நிலையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | சித்ரா மரணத்துக்கு பின் மாஃபியா... ஹேம்நாத்தின் குற்றச்சாட்டு உண்மையா? தப்பிப்பதற்கான வழியா?


அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலையா கொலையா, தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரணை நடந்துவருகிறது. சாக்னிக் சக்ரபோர்த்தியிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


பல்லவி தேயின் மர்ம மரணம் அம்மாநில சின்னத்திரை வட்டாரத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ‘KGF-3’: திடீரென மறுத்த படக்குழு- குழப்பத்தில் ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR