‘KGF-3’: திடீரென மறுத்த படக்குழு- குழப்பத்தில் ரசிகர்கள்!

இயக்குநர் பிரசாந்த் நீல் சலார் படத்தை இயக்கிவரும் நிலையில் கே.ஜி.எஃப்-3 படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 15, 2022, 04:46 PM IST
  • கே.ஜி.எஃப்-3 படத்தின் ஷூட்டிங் எப்போது?
  • கே.ஜி.எஃப்-3 பற்றி படக்குழு புதிய தகவல்.
  • பிரசாந்த் நீல் சலார் படத்தை இயக்கிவருகிறார்.
‘KGF-3’: திடீரென மறுத்த படக்குழு- குழப்பத்தில் ரசிகர்கள்! title=

நடிகர் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் அண்மையில் வெளியான கே.ஜி.எஃப்-2 வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. சுமார் 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் குவித்துள்ள இப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் இப்படத்தின் அடுத்த பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீலைப் பொறுத்தவரை தற்போது பிரபாஸ் நடித்துவரும் சலார் படத்தில் பிஸியாக இருந்துவருகின்றார்.

இதனிடையே கேஜிஎஃப்-3 படத்தின் படப்பிடிப்பு நடப்பாண்டு அக்டோபர் இறுதியில் தொடங்கப்படும் என இதன் தயாரிப்பாளர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இப்படத்தின் எக்ஸிகியூடிவ் புரொடியூஸரான கார்த்திக் கெளடா இத்தகவலை மறுத்துள்ளார்.

                                            

மேலும் படிக்க | அன்றே கணித்த உதயநிதி- சிவகார்த்திகேயனின் ‘டான்’ வசூல் எவ்வளவு?!

கேஜிஎஃப்-3 படத்தின் படப்பிடிப்புத் தேதி தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் சலார் படத்தில்தான் தற்போதைய மொத்தக் கவனமும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கேஜிஎஃப் தொடர்பாக முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ‘Marvel’ லெவலில் உருவாகும் ‘KGF 3’ - உலகையே அதிரவைக்கும் புதிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News