ஃபர்ஹானா படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அப்படம் பல வகையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இப்படம், எப்படியிருக்கிறது என்று பார்க்கலாமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தின் ஒன்லைன்:


இஸ்லாமிய பெண் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் இடத்தில் அங்கு அவர் சந்திக்கும் இன்னல்களும் பிரச்சனைகளும்தான் படத்தின் ஒன்லைன்.


படத்தின் கதை:


நடுத்தர குடும்ப தலைலர் ஜித்தன் ரமேஷிற்க்கு மனைவியாக வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்களது குடும்பம் மிகவும் பெரிது. குடும்பம் மொத்தமும் ஒரு செருப்பு கடையை வைத்து தான் தங்கள் தேவைகளை சமாளித்து வருகின்றனர். ஃபர்ஹானாவின் தந்தை இஸ்லாமிய முறை படி கட்டுபாடுடன் இருக்கிறார். மூன்று குழந்தைகளுடன் கூடிய அழகான இந்த குடும்பத்தில் வறுமை காரணமாக போராடுகின்றனர். 


இந்நிலையில் கதநாயகி தோழி மூலம் ஃபர்ஹானாக்கு ஒரு வேலை கிடைக்க அவர் அந்த வேலைக்கு செல்ல குடும்பத்தில் அனுமதி வாங்க பாடுபாடுகிறார் ஃபர்ஹானா. பல தடைகளை உடைத்து வீட்டினர் அனுமதி உடன் வேலைக்கு செல்கிறார். 


மேலும் படிக்க | Custody Twitter Review:"கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர்தான்..” கஸ்டடி படத்தின் ட்விட்டர் ரிவியூ!


முதலில் வங்கி கிரடிட் கார்ட் வழங்கும் வேலையில் சேரும் ஃபர்ஹானா சம்பளம் அதிகம் கிடைக்கும் நட்புலகம் என்ற முகம் தெரியாத நபரிடன் பேசும் வேலைக்கு தோழி உதவியுடன் செல்கிறாள். அவர்க்கு முதலில் இதை பற்றி முழுமையாக தெரியாத ஃபர்ஹானா அதில் தவறான கால்கள் வரும் இடத்தில் ஒருவர் அன்போடு பேச அவரிடம் ஃபர்ஹானா தனது குரலில் பேச அது  அவருக்கு தொடர் அழைப்பாக மாறுகிறது . இதனால் அவர் நிறுவனத்தில் சிறந்த பணியாளர் என்ற பல பெருமைகளை சேர்க்கிறார்.


தொடர்ந்து அந்த நபர் ஃபர்ஹானாவை பார்க்க அழைக்க அவரும் ஓகே சொல்கிறாள். ஆனால் உடன் பணியாற்றிய தோழி இதை போல் ஒரு சம்பவத்தில் இறந்து விட அவரை பார்ப்பதை தவிர்த்து விடுகிறாள்.  இதனால் கோபம் அடையும் அந்த நபர் என்ன செய்கிறார். ஃபர்ஹானா  அவரை நேரில் சந்தித்தாரா? என்பதே படத்தின் கதை


படத்தின் பிளஸ்:


வேலைக்கு செல்லும் மனைவியை தாங்கும் கதாபத்திரமாக ஜித்தன் ரமேஷின் நடிப்பு கவம் ஈர்த்துள்ளது. அவர் வெளிபடுத்தும் காதல் இப்பொழுது இருக்கும்  சாதாரண மனிதனை போல அவருக்கு சரியாக பொருந்தியுள்ளது. 
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை தூக்கி பிடித்துள்ளார். படம் முழுவதும் ஓடும் கதாநாயகியாகவே வாழ்ந்துள்ளார். அதுவே படத்தின் கதையை நம் கண்முன்னே நிறுத்துகிறது.  நெல்சன் வெங்கடேஷ் ஒரு சிறிய கதை மூலம் இஸ்லாமிய குடும்பத்தையும் அவர்கள் வாழ்வியலையும் மிகவும் அழகாக  சொல்லியிருக்கிறார். 


படத்தின் மைனஸ்:


முதல் பாதியின் நீளத்தை குறைத்திருந்தால், படம் கொஞ்சம் சலிப்பு  ஏற்படாமல் இருந்திருக்கும். பாடல்கள் எதுவும் சொல்லும் அளவிற்கு இல்லை. இதுவே ஃபர்ஹானா படத்தை தோய்வடைய செய்ய காரணம். படத்தின் இசை ஜஸ்டின் பிராபாகர் பாடல் பேசும்படி இல்லை என்றாலும் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலமே. செல்வராகவன் படத்தில் குறிபிட்ட நிமிடமே வருகிறார் அவரை காட்டிய விதம் வேறாக இருந்தாலும் அவரின் குறல் வைத்து வரும் காட்சிகள் நன்றாக அமைந்துஇருக்கிறது. படம் மொத்ததில் இப்பொழுது இருக்கும் சாதாரண குடும்பத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் திரையரங்குகளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.


மேலும் படிக்க | Good Night Review: குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'குட் நைட்' படத்தின் திரை விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ