தமிழ் சினிமாவில் அதிகளவில் மற்ற மொழி நடிகைகள் நடித்து வருகின்றனர், தமிழ் ரசிகர்களிடையே அவர்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.  அந்த வகையில் சமீப காலமாக அயல்நாட்டு நடிகைகளை தமிழ் சினிமாவில் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.  தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் எஸ்கே20ல் அவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார்.  அதனையடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வீடிஷ்-கிரேக்க நடிகை எல்லி அவ்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நான் சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க - விஜய் கோபம்!


துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக செல்வரகவான் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.  இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், பிரபு, எல்லி அவ்ராம், யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர், மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகை எல்லி ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.  அதாவது நடிகை எல்லி இப்படத்தில் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டார், இவரின் சில காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.


 



அதில், 'இந்த அற்புதமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதை நினைத்து நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.  நானே வருவேன் படத்தில் எனக்கான காட்சிகளை சிறப்பான இணை நடிகர் தனுஷுடனும், புத்திசாலித்தனமான இயக்குனர் செல்வரகவானுடனும் இணைந்து நேற்றைய தினம் நான் நடித்து முடித்துள்ளேன்.  எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.  மேலும் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தற்போது நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.


 



மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR