Garudan OTT Release When And Where To Watch : தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சீரியஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் சூரி. இவரை ‘பரோட்டா சூரி’ என்று கூறினால்தான் பலருக்கு தெரியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காமெடி ஹீரோ டூ சீரியஸ் நாயகன்..


நடிகர் சூரி, இப்போது முன்னணி ஹீரோக்களாக இருப்பவர்களின் பல படங்களில் ஒரு காலத்தில் பெயர் குறிப்பிடாத கதாப்பாத்திரங்களிலும், கூட்டத்தில் இடையில் நிற்கும் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவ்வாறே நடித்து, பொறுமையாக சிறிய பட்ஜெட் படங்களில் நல்ல கதாப்பாத்திரங்களை பெற்றார். 1998ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் இவரை, முதன் முதலில் பெருமைப்படுத்தியது வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம்தான். இப்படத்தில் 50 பரோட்டாக்களை சாப்பிட்டு மீண்டும் “கோட்டை அழிங்க..மொதல்ல இருந்து சாப்பிடுறேன்..” என்று இவர் கூறியது பலரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. படம் வெற்றி பெற்றதுடன் சேர்ந்து, சூரியும் கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் ஜொலிக்க ஆரம்பித்தார். எந்தெந்த ஹீரோக்களின் படங்களில் ஓரிரண்டு காட்சிகளுக்கு வந்தாரோ, அதே ஹீரோக்களுடன் சேர்ந்து அவர்களுடன் சேர்ந்து காமெடியனாக நடித்தார். 


தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரியை பார்த்த வெற்றிமாறன், திடீரென விடுதலை படம் மூலம் அவர் கையில் சீரியஸான ரோலை கொடுத்தார். ஆனால் எந்த வேலை கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிக்கும் சூரி, இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து இவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். அந்த வகையில், சில வாரங்களுக்கு முன்பு சூரி நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட படம்தான், கருடன். 


மேலும் படிக்க | Garudan Review: சூரியின் கருடன் படம் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம்


கருடன் திரைப்படம்:


கருடன் திரைப்படத்தை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்த இவர், கருடன் படம் மூலமாகவும் மக்களை கவர்ந்தார். கருடன் படத்தில் சூரி மட்டுமன்றி அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோருக்கும் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களை கொடுத்து படத்தை ஹிட் ஆக்கினார். த்ரில்லர் பாணியில் இருந்த கருடன் படம், கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியாகியது. இதில் சூரியின் ஆட்டம் வெறித்தனமாக இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது.


ஓடிடியில் வெளியீடு..


இந்தியாவில் ஓடிடி தளங்கள் பெருகிவிட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள், வெகு விரைவிலேயே ஓடிடியில் வெளியாகி விடுகின்றன. இதனால், தியேட்டர்களில் படத்தை பார்க்க தவறியவர்களும், படத்தை இன்னொரு முறை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று விரும்பியவர்களும் ஓடிடியில் படத்தை பார்த்துக்கொள்கின்றனர். அந்த வகையில், கருடன் படமும் இந்தியாவின் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 


எந்த தளத்தில் பார்ப்பது? 


கருடன் படம், இந்த மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருவதால், அடுத்த மாதம் (ஜூலை) 7ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும், விரைவில் இதன் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கருடன் படம், இதுவரை ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | மகாராஜா ஓடிடி ரிலீஸ் தேதி.. எப்போது? எந்த தளத்தில் பார்க்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ