காமெடியன் டூ ஹீரோவான சூரி! தற்போது சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சந்தானம், வடிவேலுவை தொடர்ந்து தற்போது நடிகர் சூரியும் கதாநாயகனாக வளர்ந்துள்ளார். முக்கிய இயக்குனர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

 

1 /5

வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடியனாக அறிமுகமான பரோட்டா சூரி தற்போது படத்தின் கதாநாயகனாக வளர்ந்துள்ளார். தனது வருங்கால சினிமா உலகை சிறப்பாக கட்டமைத்துள்ளார்.  

2 /5

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக உச்சத்தில் இருக்கும் பல நடிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது சூரியும் இணைந்துள்ளார்.    

3 /5

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் நாயகனாக உருமாறிய சூரி, தற்சமயம் மூன்று முக்கியமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.   

4 /5

விடுதலை பார்ட் 2, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

5 /5

ஹீரோவாக வளர்ந்துள்ள சூரி தற்போது ஒரு படத்தில் நடிக்க 7 முதல் 8 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் வெளியான கருடன் படத்தின் வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.