மகாராஜா ஓடிடி ரிலீஸ் தேதி.. எப்போது? எந்த தளத்தில் பார்க்கலாம்?

Maharaja OTT Release Date: விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கால் பாதித்த போதிலிருந்து தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர், நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. மேலும் இது அவரது 50வது திரைப்படமாகும்.

1 /7

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெளிக்கிழமை திரையரங்கில் வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த படம் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும்.  

2 /7

குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் மகாராஜா திரைப் படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக மகாராஜா திரைப்படம் உருவாகியிள்ளது. இந்த படத்தில் மமதா மோகன்தாஸ், நட்டி என்கிற நட்ராஜ், அபிராமி, திவ்ய பாரதி, பாரதிராஜா, முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.  

3 /7

‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமான அனுராக் காஷ்யப் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார்.  

4 /7

இந்த படம் வெளியான முதல் தற்போது வரை மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. அதேபோல் படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பை பலர் பாராட்டி வருகின்றனர்.  

5 /7

வசூல் நிலவரத்தை பொருத்தவரை இந்த படம் ஐந்து நாள் முடிவில் மொத்தமாக ரூ. 45 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.   

6 /7

மகாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.   

7 /7

இந்தியாவின் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் இப்படத்தை ஓடிடியில் வெளியிட இருக்கிறது. இப்படத்தை, இந்த தளத்தில் இம்மாத இறுதிக்குள் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.