இவருக்கு ஜோடியாகும் ஷிவாணி; வெளியான Proof போட்டோ
விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது.
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் வரும் படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அவருடன் நடிகர் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கி வரும் விக்ரம் (Vikram) படத்தை நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள்.
ALSO READ | Viral Dance video: ஓமன குட்டியாக மாறிய பிக்பாஸ் பிரபலம்: வைரல் வீடியோ
இந்நிலையில் தற்போது இந்த படம் தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஷிவானி நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு நடிகை ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம், வைரலாகும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR