Hit List Review: தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். இவரது படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தற்போது அவரது மகன் விஜய் கனிஷ்கா ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தை தயாரிக்க அவரது உதவி இயக்குனர்களான சூரியகதிர் காக்கல்லர் - கே.கார்த்திகேயன் இயக்கி உள்ளனர். எஸ்.தேவராஜ் படத்திற்கு கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், ராமச்சந்திர ராஜு (கேஜிஎஃப்-கருடா ராம்), முனிஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். சி.சத்யா ஹிட் லிஸ்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடுத்தர வீட்டு பையனான விஜய் கனிஷ்கா ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். மிகவும் சாதுவான எந்த ஒரு உயிரையும் கொல்ல கூடாது என்று நினைக்கிறார் விஜய். தனது அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு முகமூடி அணிந்த நபர் விஜய்யின் குடும்பத்தை கடத்தி வைத்து கொண்டு, அவர்களை விடுவிப்பதற்காக விஜய்க்கு தொடர்ச்சியான பணிகளைக் கொடுக்கிறார். விஜய் பணிகளை செய்ய மறுப்பதால் அவரது தாய் மற்றும் தங்கையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். முதலில் வீட்டில் இருக்கும் சேவலை கொலை செய்ய சொல்கிறார், பிறகு ஒரு கும்பலின் தலைவரை கொலை செய்ய சொல்கிறார். இந்த ஆபத்தான விளையாட்டில் சிக்கி கொள்ளும் விஜய் அதில் இருந்து எப்படி தப்பித்தார்? முகமூடி அணிந்த நபர் யார் என்பதை த்ரில்லர் வடிவில் நமக்கு கூறி உள்ளனர். 


மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதுவும் மொக்கையான இந்த காரணத்திற்காகவா?


விஜய் கனிஷ்கா தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் சாதுவாகவும், போக போக ஆக்ஷனில் இறங்குவதிலும் வித்தியாசத்தை காண்பித்துள்ளார். கோலிவுட்டிற்கு நல்ல ஒரு புது வரவு..! போலீஸ் அதிகாரியாக வரும் சரத்குமார் ஏசிபி கதாபாத்திரத்தில் நச் என்று பொருந்தி உள்ளார். அவருடைய நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இவர்களை தவிர ராமச்சந்திர ராஜு, முனிஷ்காந்த் மற்றும் சித்தாரா உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். கௌதம் மேனன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.


படம் ஆரம்பத்தில் சற்று மெதுவாக நகர்கிறது. இருப்பினும் அடுத்தடுத்த காட்சிகளில் நம்மை படத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். முதல் பாதியில் சில சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் பாதியில் நிறைய விஷயங்களை சொல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதில் சிலவை மட்டுமே ஒர்க் ஆகி உள்ளது. மேலும் நிறைய காட்சிகளில் லாஜிக் மீறல்களும் அதிகம் உள்ளன. முதல் பாதியில் செலுத்திய கவனத்தை, இரண்டாம் பாதியிலும் செலுத்தி இருக்கலாம்.


சூரியகதிர் காக்கல்லர் - கே.கார்த்திகேயன் இயக்கத்தில் ஹிட் லிஸ்ட் படம் திரில்லர் ரசிகர்களுக்கு பிடித்த விதத்தில் உருவாகி உள்ளது. சி.சத்யா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. கே.ராம்சரண் ஒளிப்பதிவு நல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான காட்சிகளை கொண்டுள்ளது. ஜான் ஆபிரகாம் எடிட்டிங் சிறப்பாக அமைத்துள்ளது. நல்ல ஒரு திரைக்கதை கொண்ட இந்த படம் இன்னும் நன்றாக எடுக்கப்பட்டு இருந்தால் தமிழில் ஹிட்டான த்ரில்லர் படமாக மாறி இருக்கும்.


மேலும் படிக்க | விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ