விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..

Nandamuri Balakrishna Pushes Anjali Viral Video : தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர், விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : May 30, 2024, 10:18 AM IST
  • மேடையில் நடிகையை தள்ளிவிட்ட நடிகர்!
  • நெட்டிசன்கள் காட்டம்..
  • வைரல் வீடியோ!
விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ.. title=

Nandamuri Balakrishna Pushes Anjali Viral Video : தமிழ் திரையுலகில், கோலிவுட் கதாநாயகர்களுக்கு மட்டுமல்ல தெலுங்கு திரையுலகில் பிரபலமாக விளங்கும் நடிகர்களுக்கும் பல ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர். அப்படி, தென்னிந்திய அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர், நந்தமுரி பாலகிருஷ்ணா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ராமா ராவின் மகனான இவர், அரசியல், சினிமா என இரண்டிலும் ஈடுபாடு உடையவர். இவர் செய்யும் சில விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும், ஒரு சில விஷயங்கள் அனைவரையும் எரிச்சலடைய செய்யும் செயல்களாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் தற்போது இணையதளம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது. 

பாலகிருஷ்ணா:

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நந்தமுரி பாலகிருஷ்ணா. இதுவரை அவர் நடித்த படங்கள் ஒன்று ஆக்ஷன் படங்களாகவோ அல்லது ‘ராமாயணம்’ போல தெய்வீக கதைகளாகவோ இருந்துள்ளன. 63 வயதிலும் துள்ளளுடன் இருக்கும் இளைஞர் பாேல பறந்து பறந்து சண்டையிடுவார், பாலகிருஷ்ணா. இவரை, ரசிகர்கள் பாலையா என அழைப்பர். 

கேமராவிற்கு முன்பு மட்டுமல்ல, இயல்பு வாழ்க்கையிலும் தன்னை ஒரு ஹீரோ போலவே காண்பித்து கொள்ளும் இவர், பொது வெளிகளில் அவ்வப்போது யாரையேனும் துன்புறுத்தும்படியான செயல்களில் ஈடுபடுவார். ஒருமுறை, ஒரு குழந்தையை கையில் வைத்து போஸ் கொடுக்கும் பாேது, அந்த குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அந்த குழந்தையை அதட்டலாக தட்டி எழுப்பி சிரிக்கும் படி கூறி கேமராவிற்கு போஸ் கொடுக்க வைத்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

நடிகையை தள்ளிவிட்டார்!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை அஞ்சலி. ‘கற்றது தமிழ்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், தாெடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடிக்க சென்றுவிட்டார். இவருக்கு தமிழில் இருப்பது போலவே தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகளவில் இருக்கின்றனர். இவர், தற்போது ‘கேங்க்ஸ் ஆப் கோதாவரி’ (Gangs of Godavari) எனும் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரமோஷன் விழா, நேற்று நடைப்பெற்றது. 

மேலும் படிக்க | ரசிகரின் போனை பிடுங்கி விசிறியடித்த பிரபல பாடகர்..வைரல் வீடியோ!

இவ்விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். அப்போது மேடை ஏறுகையில் இடமில்லை என்பதற்காக மேடையில் இருந்த நடிகைகள் அஞ்சலி மற்றும் நோரா ஃபெட்டேஹி ஆகியோரை தள்ளி நிற்க கூறினர். நடிகை அஞ்சலி அப்போது கொஞ்சம் மெதுவாக நகர்ந்தார். இதைப்பார்த்து கடுப்பான பாலையா, அவரை பிடித்து தள்ளினார். இதை பார்ப்பதற்கு அவர் விளையாட்டாக செய்தது போல தெரியவில்லை. ஆனால் நடிகை அஞ்சலி உள்பட, அவர் அருகில் இருந்த அனைவருமே இதைப்பார்த்து சிரித்தனர். 

அது மட்டுமன்றி, பாலையாவிற்கு அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலில் கலராக எதையோ ஊற்றி வைத்திருப்பதும் வைரலாகி வருகிறது. இது ஒரு வேளை மதுவாக இருக்கலாம் என்றும், இதை குடித்து விட்டு அவர் இந்த செயலை செய்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

நெட்டிசன்கள் காட்டம்:

பாலகிருஷ்ணாவின் இந்த செயல், சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சிலர், “இதெல்லாம் ஒரு பெரிய மனிஷன் செய்யுற வேலையா…” என்று கேட்டு வருகின்றனர். சினிமா துறையில் பெண்கள் இதுபோன்று நடத்தப்படுவது வேதனைக்குரிய விஷயமாக இருப்பதாகவும் சிலர் கூறிவருகின்றனர். கூடவே அஞ்சலியையும், “இதுவே நடிகர் அல்லாத ஏதாவது சாதாரணமானவர் இப்படி உங்களை தள்ளினால் அமைதியாக இருப்பீர்களா?” என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | பாலகிருஷ்ணா-வை இயக்க விரும்பும் பிரபல எழுத்தாளர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News