ஹாலிவுட்டின் பிரபல ராப் இசைக்கலைஞர்களுள் ஒருவராக வலம் வருபவர், பிக் போக்கி(Big Pokey) உயிரிழந்துள்ளார். இவருக்கு 45 வயது ஆகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல ராப் பாடகர்:


ஆங்கிலத்தில் ராப் பாடல்கள் பாடும் திறமையான இசைக்கலைஞர்களுள் ஒருவர், பிக் போக்கி. ஹவுஸ்டன் நகரைச்சேர்ந்த இவர், 50க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். பல ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். ராப் இசையை ரசிப்பவர்கள மத்தியில் இவர் மிகவும் பிரபலம். பிற இசைக்கலைஞர்களை போல, இவரும் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அப்போது, ஒரு பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். 



மேலும் படிக்க | உண்மையான சார்பட்டா பரம்பரை ஹீரோ காலமானார்..! ரசிகர்கள்-பிரபலங்கள் இரங்கல்!


மேடையிலேயே பிரிந்த உயிர்:


பிக் போக்கி, டெக்ஸாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை இரவு இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். ஒரு பாடலை பாடிக்கொண்டிருக்கும் போது இடையிலேயே அந்த பாடலை நிறுத்தி மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். சில விநாடிகளுக்குள்ளேயே அப்படியே மயங்கி சரிந்து விழுந்துள்ளார். கூட்டத்தில் இருந்த ஒரு மருத்துவர் இவருக்கு முதலுதவி அளித்துள்ளார். அப்போதே நாடி துடிக்காமல்தான் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது அவர பரிசோதித்த மருத்துவர்கள் பிக் போக்கி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 


ரசிகர்கள் சோகம்: 


பிக் போக்கி, கொரோனா காலத்திற்கு பிறகுதான் பிரபலமான இசைக்கலைஞராக மாறியுள்ளார். சென்சாய் என்ற பெயரில் இவர் வெளியிட்டிருந்த ஆல்பங்களும் பாடல்களும் பெரிய ஹிட் அடித்துள்ளன. பிக் போக்கியின் ரசிகர்கள் இவரது மறைவு குறித்து சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


மர்மமான முறையில் மரணம்: 


ராப் பாடகரான பிக் போக்கிக்கு 45 வயதுதான் ஆகிறது. இவர் உயிரிழந்து பின்பு இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்று கூறுகின்றனர். மாரடைப்பு, நெஞ்சு வலி என எதுவுமே இவர் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்படவில்லை. 


இரங்கல் பதிவுகள்: 


45 வயதான பிக் போக்கியின் மரணத்தை அவரது செய்தி தொடர்பாளர் ஊடகத்தினரிடையே உறுதி செய்தார். இதுகுறித்து அவர் கொடுத்திருந்த பேட்டியில், “பிக் போக்கர் இறந்து விட்டார். நண்பர்களாலும் குடும்பத்தினராலும் ரசிகர்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட நபர் அவர்” என்று கூறியுள்ளார். 


சக ராப் பாடகரான பன் பி என்பவரும் பிக் போக்கர் குறித்து இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இதை நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய திறமைசாலியும் நல்ல மனிதருமான பிக் போக்கி இறந்து விட்டார். ஹவுஸ்டன் நகரின் பெருமையாக திகழ்ந்த தங்கமான மனிதர் இவர். ஆத்மா சாந்தியடைக..” என்று கூறியிள்ளார். 


மேலும் படிக்க | Father's Day: ‘அன்புள்ள அப்பா..’ ஸ்வீட்டான தந்தையர் தின வாழ்த்துகள் சொன்ன பிரபலங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ