உண்மையான சார்பட்டா பரம்பரை ஹீரோ காலமானார்..! ரசிகர்கள்-பிரபலங்கள் இரங்கல்!

Sarpatta Parambarai: சார்பட்ட பரம்பரை படத்தின் உண்மை கதாப்பாத்திரமான குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் காலமானார்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 18, 2023, 04:00 PM IST
  • சார்பட்டா பரம்பரையின் உண்மையான ஹீரோ பாக்ஸர் ஆறுமுகம்.
  • உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
  • ரசிகர்களும் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உண்மையான சார்பட்டா பரம்பரை ஹீரோ காலமானார்..! ரசிகர்கள்-பிரபலங்கள் இரங்கல்! title=

சார்பட்டா பரம்பரையின் உண்மையான ஹீரோ, பாக்ஸர் ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 

சார்பட்டா பரம்பரை ஹீரோ..!

வடசென்னையில் மாரியப்பன் மற்றும் முத்துலட்சுமி ஆகியோர்களுக்கு 1955ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர் ஆறுமுகம். இவர் ஒரு திறமையான குத்துச்சண்டை வீரர் என்பதால், பாக்ஸர் ஆறுமுகம் என அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். 19980 களில் தமிழகத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டிகளில் ‘சார்பட்டை பரம்பரை’க்காக விளையாடிவந்தார். குத்துச்சண்டையில் பல வகையை கற்றுத்தேர்ந்த இவர், எதிராளியை ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்துவதை வழக்கமாக கொண்டவர், இதனாலேயே இவர் மக்களால் ‘நாக்-அவுட் கிங்’ என அழைக்கப்பட்டார். சார்பட்டா பரம்பரை படத்திற்காக பா.ரஞ்சித் பல குத்துச்சண்டை வீரர்களை நேரில் சென்று சந்தித்து படத்திற்கு தேவையான தகவல்களை சேகரித்தார். அப்படி அவர் நேரில் கண்ட குத்துச்சண்டை வீரர்களுள் மிகவும் முக்கியமானவர், பாக்ஸர் ஆறுமுகம். 

மேலும் படிக்க | OTTல் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்; Netflix, Amazon, Hotstar, ZEE5ல் பாருங்கள்!

உயிரிழப்பு: 

பாக்ஸர் ஆறுமுகம், 1985ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாவலராக செயப்பட்டுள்ளாராம். அது மட்டுமன்றி, தண்ணில கண்டம், ஆரண்ய காண்டம் உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறல் காரணமாக பாக்ஸர் ஆறுமுகம் அவதிப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, தனியான் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட இவர் பின்னர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதையடுட்து நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

திரையுலகினர் இரங்கல்..

பாக்ஸர் ஆறுமுகத்திற்கு திரையுலகினரும் இரங்கல் செலுத்தினர். அரசியல் பிரமுகர் டி.ஜெயகுமார் ஆறுமுகத்தின் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசு இவர்தான் எனக்கூறப்படுகிறது. இவரது மறைவால் வட சென்னை மக்களும், அவரது சுற்றத்தாரும் வாடியுள்ளனர். 

மேலும் படிக்க | Vijay: சினிமாவை விட்டு விலகும் விஜய்? இதுதான் அவரது கடைசி படமா..!

மேலும் படிக்க | Leo First Single: நான் ரெடி பாடலை பாடியது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News