பைட்டர் படத்தில் இருந்து 'ஷேர் குல் கயே' (Sher Khul Gaye) மற்றும் 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) என்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.  இந்த பாடல்களில் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடலான ஹீர் ஆஸ்மானி (Heer Aasmani) வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆளே அடையாமல் தெரியாமல் மாறி போன ரித்திகா சிங்! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!


இந்த பாடல் விமானப்படை விமானிகளின் வாழ்க்கை, அவர்களின் தினசரி கடமை பற்றி எடுத்து கூறுகிறது.  'ஹீர் ஆஸ்மானி' பாடல் ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரத்தை அனைத்து விதத்தில் இருந்தும் வெளிப்படுத்துகிறது. அவர் ஸ்க்வாட்ரான் லீடர் ஏஸ் ஃபைட்டர் ஜெட் பைலட் ஷம்ஷர் பதானியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விமானம் ஓடுபாதையில் செல்ல தயாராகும் போது என்ன என்ன வேலைகளை பைலட் செய்கிறார் என்பதை காட்டுகிறது. ஹீர் ஆஸ்மானி பாடல் விமானப்படை விமானிகளின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.


ஹிருத்திக் ரோஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் தீபிகா படுகோன், கரண் சிங் குரோவர், அக்‌ஷய் ஓபராய் ஆகியோரைக் கொண்ட ஏர் டிராகன் அணிக்குள் நடக்கும் அன்றாட வேலைகளை ஹீர் ஆஸ்மானி பாடல் எடுத்து கூறுகிறது.  பி ப்ராக்கின் கடினமான பாடல் வரிகள் மற்றும் குரல்களுடன் இணைந்து, இந்த ஹீர் ஆஸ்மானி ஒரு இனிமையான மெல்லிசையாகும், ஃபைட்டர் தீம் பாடலையும் கொண்டுள்ளது. ஃபைட்டர் படம் இந்தியாவின் 75வது குடியரசு தினத்தன்று 2024 ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. மேலும் இப்படம் 3டியில் வெளியாகும் ஹிருத்திக் ரோஷனின் முதல் படமாகும்.



மேலும் படிக்க | மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது - இயக்குனர் விஜய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ