பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க மறுத்தேன் - ஆண்ட்ரியா பகீர்
பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க மறுத்த என்னை இயக்குநர் கட்டாயப்படுத்தியதாக ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்
தமிழின் முன்னணி நடிகை மற்றும் பாடகியாக வலம் வரும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரிலீஸாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பத்தாகவும் தகவல் வெளியானது. ரிலீஸூக்கு படம் தயாராகி வரும் நிலையில், படத்தில் நடித்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பிசாசு 2 படத்தின் கதையைக் கேட்டபோது 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் தெரிவித்ததாகவும், அதில் தனக்கு அப்போது உடன்பாடில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | விஜய் கொடுத்த சர்பிரைஸால் குக்வித் கோமாளி சிவாங்கி ஹேப்பி
கதை தரமானதாக இருந்ததால், இயக்குநரின் கட்டாயத்தின் பேரில் ஒப்புக்கொண்டதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். "பிசாசு 2 படத்தில் பேயாக நடித்து முடித்துள்ளேன். விரைவில் படம் ரிலீஸாக இருக்கிறது. படத்தின் கதையைக் கேட்டபோது 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் கூறினார். அதில் எனக்கு அப்போது உடன்பாடில்லை. இயக்குநர் கட்டாயப்படுத்தினார். கதை தரமானதாக இருந்ததால் பின்னர் ஒப்புக் கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியாவின் இந்த கருத்து திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான திரைக்கதைகளைக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா, வடசென்னை, தரமணி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இப்போது, பிசாசு 2 படத்தை நடித்து முடித்துவிட்டு, நோ என்ட்ரி படத்தில் நடித்து வருகிறார். அண்மையில், அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தில் ஹிட் அடித்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடலை ஆண்ட்ரியா தான் பாடியிருந்தார். இந்தப் பாடல் அவரைக் காட்டிலும் கவர்ச்சியில் கலக்கிய சமந்தாவுக்கே பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
மேலும் படிக்க | ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்; இருவர் கைது, நடந்தது என்ன
மிஸ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 திகில் படமாக உருவாகியிருக்கிறது. நாளை மறுநாள் டீசர் வெளியாகும். அதன்பின் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது. ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்தது திரைவட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பிசாசு 2 அடுத்த சலசலப்பை உருவாக்க வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR