என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் இறைவன்.  இந்த படத்தில் நயன்தாரா, நரேன், ராகுல் போஸ், சார்லி, வினோத் கிசன், அழகம்பெருமாள், பகவதி பெருமாள் என பலர் நடித்துள்ளனர்.  ஃபேஷன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது, யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இறைவன் படத்தின் போஸ்டர்களும், டிரைலரும் மிரட்டலாக இருந்தது. இந்தப் படம் ஒரு சைக்கோ திரில்லராக உருவாகியுள்ளது, மேலும் படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் படத்தில் அந்த அளவிற்கு ரத்த காட்சிகள் நிறைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ


சென்னையில் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆக இருக்கும் ஜெயம் ரவி பல என்கவுண்டர்களை செய்து வருகிறார்.  மற்றொரு போலீஸ் அதிகாரியான நரைன், ஜெயம் ரவி உயிர் தோழனாக இருக்கிறார். அவரை ஒவ்வொரு கடினமான சூழ்நிலைகளில் இருந்தும் காப்பாற்றுகிறார். அவரது தங்கை நயன்தாரா ஜெயம் ரவியை ஒரு தலை பட்சமாக காதலிக்கிறார்.  ஒரு சைக்கோ கொலைகாரன் பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்து கண்கள் மற்றும் கை கால்களை வெட்டுகிறார்.  இந்த கேஸ் ஜெயம் ரவி மற்றும் நரைனிடம் வருகிறது. இருவரும் சேர்ந்து அந்த சைக்கோ கொலைகாரனை பிடித்தார்களா என்பதே இறைவன் படத்தின் கதை.



ஒரு கோவக்கார போலீஸ் ஆபீஸராக ஜெயம் ரவி கச்சிதமாக பொருந்தியுள்ளார்.  படம் முழுக்கவே துளியும் சிரிப்பில்லாத ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  ஆக்சன் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் டயலாக் இல்லாமல் முக பாவனைகள் மூலமாகவே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  நயன்தாரா படம் முழுக்க ஆங்காங்கே வந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  இவர்களை தவிர வில்லன்களாக வரும் ராகுல் போஸ் மற்றும் வினோத் கிசன் தங்களது 200 சதவீத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்று சொல்லலாம்.


அதுவும் வினோத் கிஷன் இரண்டாம் பாதியில் முழுக்கவே தன் பின்னால் கொண்டு செல்கிறார்.  படம் பார்க்கும் நாமே எழுந்து அடிக்கணும் என்ற உணர்வை கொண்டு வருகிறார்.  தமிழ் சினிமாவில் பல படங்கள் சீரியல் கில்லர் கொலையை மையமாக வைத்து படங்கள் வந்திருந்தாலும் இறைவன் சற்று அதிலிருந்து விலகி உள்ளது.  சமீபத்தில் வெளியான போர் தொழில் படம் கூட இதே போல் சைக்கோ கிள்ளர் பற்றியது தான்.  படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை திரைக்கதை எங்கும் விலகாமல் நேர்கோட்டில் செல்கிறது. அடுத்து யாருக்கு என்ன நடக்கப் போகிறது என்ற ஒரு பதட்டம் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது.


யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கூடுதல் பளம்.  ஒரு சைக்கோ கொலைகாரனை தேடிப் பிடிக்கும் த்ரில்லர் படம் என்றாலும் ஏன் இவ்வளவு வைலன்ஸ் என்று படம் முடிந்து வெளியில் வரும் போது தோன்றுகிறது.  மேலும் இரண்டாம் பாதியில் எப்போது படத்தை முடிப்பீர்கள் என்ற எண்ணம் எழுகிறது. படத்தில் பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அதனை திரைக்கதையில் சிறப்பாக கையாண்டு உள்ளார் இயக்குனர்.


மேலும் படிக்க | சந்திரமுகி2, இறைவன், சித்தா-மூன்றில் எந்த படம் பெஸ்ட்..? எதை முதலில் பார்க்கலாம்..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ