ஜெய் பீம் பாட்டிக்கு வீடு: லாரன்ஸ் அறிவிப்பு
ஜெய் பீம் கதையின் ஒரிஜினல் கதாநாயகி பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய்பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தான் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜெய் பீம் திரைப்படம் சிறப்பாக இருந்தது. பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்கூறும் படமாக ஜெய்பீம் இருந்தது.
ALSO READ ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது!
இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு நடக்கும் அவலங்களையே நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் உண்மையில் ராசாக்கண்ணுவிற்கு நடந்த அநீதிகளைப் பார்த்த பார்வதி அம்மாளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது. அதன்படி இந்த படத்தின் மூலம் பார்வதி அம்மாளின் கதை பலருக்கு தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நிஜ வாழ்க்கை ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.,
A House for Rajakannu’s family.
செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி @jbismi அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமைநிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.
28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா அவர்களுக்கும், திருமதி.ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும். என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ உண்மையை திரையில் பேச திராணி வேண்டும் கொதிக்கும் மோகன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR