இணையத்தில் வெளியான ஜெயிலர் வீடியோ - படக்குழு அதிர்ச்சி
ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அன்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பாரென்று அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ப்ரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையெ விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது.
ரசிகர்களால பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக நெல்சன் திலீப்குமாரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனையடுத்து, பீஸ்ட் பட ரிசல்ட்டால் ரஜினி தரப்பு அப்செட் ஆகிவிட்டதாகவும் நெல்சனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநர் இயக்குவிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஒருவழியாக பிரச்னை ஓய்ந்த பிறகு நெல்சனே படத்தை இயக்குவார் என உறுதியானது. படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கப்பட்டது. பின்னர் எண்ணூரில் நடந்தது. அப்போது ரஜினிகாந்த் நடித்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து புதியதாக ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் ரஜினிகாந்த் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் காட்சி. கோட் சூட் அணிந்து சக நடிகர்களுடன் பேசி நடிக்கும் காட்சி போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் படக்காட்சி கசிந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிட்டவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | பொங்கல் ரிலீஸ் ரேஸில் வாரிசு இல்லை; படப்படிப்பு தாமதத்துக்கு காரணம் இதுதான்
ஜெயிலர் படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என கூறப்படுகிறது. இதேபோல் விஜய் நடித்துவரும் வாரிசு படத்திலிருந்தும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ