கோலிவுட்டின் சாக்லேட் பாய் ஹீரோக்களுள் ஒருவர், ஜெயம் ரவி. இவரது உண்மையான பெயர் ரவி. சினிமா குடும்பத்தில் இருந்து வந்த நடிகர், ரவி. இவரது தந்தை மோகன் பிரபலமான சினிமா எடிட்டர். ரவியின் அண்ணன் மோகன் ராஜா, வெற்றிகரமான இயக்குநர். இவர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படம் மூலம் ரவி ஹீரோவாக அறிமுகமானார். அதிலிருந்து இவரது பெயர், ஜெயம் ரவி என்று மாறியது. ஜெயம்தான் இவரது முதல் படம் என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர் குழந்தை கதாப்பாத்திரமாகவும் சில படங்களில் நடித்துள்ளார். அவை என்னென்ன படங்கள் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை கதாப்பாத்திரமாக..


ஜெயம் ரவி, 1989ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு தொட்டில் சபதம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு மொழியில் வெளியான‘பாவா பாவமரிடி’ என்ற படத்திலும் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். அதே வருடத்தில் வெளியான பலண்டி பெளரஷம் என்ற படத்திலும் சிறு பிள்ளையாக நடித்துள்ளார். இவை அனைத்தும் அவரது தந்தையின் தயாரிப்பில் வெளியான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்:


தெலுங்கு மொழியில் வெளியாகும் காமெடி, காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த படங்களை தமிழில் ரீ-மேக் செய்து வெளியிட்டு வந்தனர். அந்த படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தும் உள்ளன. அப்படி ஹிட் கொடுத்த படங்களில் ஹீரோவாக நடித்திருந்தவர், ஜெயம் ரவி. 2005ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்வொஸ்தானண்டே நெந்தோனண்டா படத்தை ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்தனர். இதில், லண்டன் ரிட்டர்ன் நாயகனாக நடித்து அன்றைய இளசுகளின் மனங்களில் ஹாண்ட்ஸம் ஹீரோவாக நின்றவர், ஜெயம் ரவி. இதையடுத்து, இதற்கு முன்னதாக 2003ஆம் ஆண்டில் அம்மா நானா ஓ தமிழியா அம்மாயி என்ற பெயரில் ஒரு படம் வெளியாகியிருந்தது. இதை தமிழில் ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ என்ற பெயரில் ரீ-மேக் செய்தனர். இதிலும் ஹீரோ ஜெயம் ரவிதான். இதில் அம்மா மீது அதிகம் பாசம் வைத்த குத்துச்சண்டை வீரர் கதாப்பாத்திரத்தில் பலரை கவர்ந்தார், ஜெயம் ரவி.


மேலும் படிக்க | விஜய் மகன் இயக்கும் படத்தில் ஹீரோ யார் தெரியுமா? ‘இந்த’ 4 பேரில் ஒருவர்தான்..!


ஜெயம் ரவிக்கு காதல்-காமெடி செட் ஆக, அதே பாணியில் பயணிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த இன்னொரு படம் சந்தோஷ் சுப்ரமணியம். இந்த படம் தெலுங்கில் ‘பொம்மரில்லு’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இதில் சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார். தமிழிலும் சித்தார்த்தை தான் நடிக்க வைக்க இருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக ஜெயம் ரவி இதில் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். படம் மாஸ் ஹிட் கொடுக்க, ஜெயம் ரவியின் சினிமா மார்கெட்டும் உயர்ந்தது. 


ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம்:


ஜெயம் ரவி காதல் கதைகளை விட தற்போது ஆக்‌ஷன் கதைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 2013ஆம் ஆண்டு வெளியான ஆதி பகவன் படத்தில் வில்லன்-ஹீரோ என்று இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தினார். அதன் பிறகு தொடர்ந்து தனி ஒருவன், பூலோகம், மிருதன், போகன், வனமகன், டிக்டிக்டிக், அடங்க மறு என வரிசையாக வலுவான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். இதில், ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. 


தனி ஒருவன் 2:


மோகன் ராஜா இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திலும் ஜெயம்ரவிதான் ஹீரோ. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. ஜெயம் ரவி நடித்துள்ள ‘இறைவன்’ திரைப்படம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. 


பிறந்தநாள்..


ஜெயம் ரவிக்கு இன்று 43ஆவது பிறந்தநாள். இதையொட்டி ரசிகர்களும் திரை உலகை சேர்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | ஒரு வழியாக விடாமுயற்சி அப்டேட் வந்துருச்சு! படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ