விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சுபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகர் சந்தானம்.  90'ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட்டான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.  இவரின் திறமையை பார்த்து பட வாய்ப்புகள் கிடைத்தது, 2000 காலகட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக சந்தானம் இருந்து வந்தார்.  பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் சந்தானம் நடித்துள்ளார், இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு ஆனது.  பல படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தவர் தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.  அறை எண் 305ல் கடவுள், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு போன்ற பல படங்களில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  தற்போது இவர் 'கிக்', 'வடக்குபட்டி ராமசாமி' மற்றும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க: தனது அறுவை சிகிச்சை பற்றி மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம் ஷிவின்!


சந்தானம் எவ்வளவு தூரம் உயர்ந்தாலும் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் நடித்த நாட்களில் இருந்தே தனது நண்பர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.  சுவாமிநாதன், ஈஸ்டர், சேசு, மாறன், மனோகர் போன்ற தனது நண்பர்கள் பலருக்கும் சந்தானம் அவரது படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்கி வந்தார்.  நண்பர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இவர் தற்போது தனது நீண்ட நாள் நண்பரும், நடிகருமான காதல் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.  பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான 'காதல்' படத்தில் பரத்தின் நண்பனாக நடித்திருந்தவர் தான் நடிகர் சுகுமார்.  காதல் படத்தில் நடித்ததன் மூலம் இவர் 'காதல்' சுகுமார் என்று பிரபலமாக அறியப்பட்டார்.



மேலும் காதல் சுகுமார் கமல்ஹாசனின் 'விருமாண்டி', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' போன்ற பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  நடிப்பு தவிர இவர் திருட்டு விசிடி மற்றும் சும்மாவே ஆடுவோம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.  திரையுலகிலிருந்து நீண்ட காலமாக விலகியிருந்த இவர் தற்போது தனது நண்பர் சந்தானத்தை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருப்பதாகவும், இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதுவரை காதல் சுகுமார் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் சந்தானத்துடன் அவர் இணையப்போகும் படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: நடிகை இலியானா கர்ப்பம்..‘எப்புட்ரா’? ஷாக் ஆன ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ