தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் 2004ம் ஆண்டு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.  இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார், அதேபோல தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.  இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு  அக்டோபர் 30ம் தேதி அவரது காதலரான கவுதம் கிச்சுலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.  இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | 'ஏகே61' படத்தின் கதை இதுதானா? வெளியான தகவல்!


கொரோனா தொற்றுக்காலம் என்பதால் இருவரது குடும்பத்தினர், நெருங்கிய உற்வினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் வைத்து திருமணம் நடத்தப்பட்டது.  திருமணத்திற்கு பின்னர் காஜல் அகர்வாலின் சில புகைப்படங்கள் வெளியாகி அவர் கார்ப்பமாக இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வந்தது.  அதன்பின்னர் அவரே இந்த வருட புத்தாண்டு தினத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்தார், இவருக்கு ஏப்ரல்-19ம் தேதி அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.  குழந்தை பிறந்த சமயத்தில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் குழந்தையின் முகம் சரியாக தெரியவில்லை, ஆனால் தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்த்துள்ள புகைப்படத்தில் குழந்தையின் முகம் தெரிகிறது, இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.


 



அன்னையர் தினத்தை முன்னிட்டு காஜல் அகர்வால் முதன்முதலாக அவரது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டு, அவரது தாய் வினய் அகர்வால் குறித்து உணர்ச்சிகரமாக சில வரிகளையும் எழுதியிருந்தார்.  தான் குழந்தை பெற்ற பிறகு தான், தனது தாயின் தாய்மை பயணத்தை உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.  தற்போது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்ததோடு, அதில் 'நீல் கிச்சுலு, என் வாழ்வின் காதல், என் இதயத்துடிப்பு' என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | கைதி 2 வேலைகள் எப்போது தொடக்கம்?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR