Kamal Haasan Indian 2 Vs Kalki 2898 AD Update : நடிகர் கமல்ஹாசன் தற்போது நடித்து முடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 படம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் 2 திரைப்படம்:
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தியன் 2 (Indian 2) திரைப்படம். இந்த படத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் உலக நாயகம் கமல்ஹாசனுடன் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மறைந்த மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த படத்தின் போஸ்டர்களும், அவ்வப்போது சில வீடியோக்களும் வெளிவந்துள்ளன.


கல்கி 2898 ஏடி திரைப்படம்:
மறுபுறம் ரசிகர்களால், ‘ரிபள் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898 படத்தில் அமிதாப் பச்சன் , ரானா டகுபதி மற்றும் தீபிகா படூகோன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். "உலக நாயகன் கமல்ஹாசன்" இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும் படிக்க | Latest News TV Anchor DD Divorce: விவாகரத்தில் முடிந்த திருமணம்..தாங்க முடியாத சாேகம்! மனம் திறந்த டிடி!


இந்தியன் 2 Vs கல்கி 2898:
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என முன்னதாக படக்குழு அறிவித்த நிலையில், தற்போது அதே ஜூன் மாதத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படமும் வெளியாக இருக்கிறது. இப்படம் வரும் ஜூன் மாதம் 14 அல்லது 17 ஆம் தேதி வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் திரைக்கு வருவது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.


தக் லைஃப் அப்டேட்:
இதனிடையே தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். கமலின் 234வது படமான இதன் டைட்டில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியனது. மேலும் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Ghilli Re Release TN Box Office Collection: 20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ