விக்ரம் பட ப்ரோமோஷன் - சூப்பர் ஸ்டாரை சந்தித்த உலக நாயகன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் கமல் ஹாசன் இன்று சந்தித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜூன் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடித்துள்ளன.
மேலும் படிக்க | 'தளபதி 66' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய்?
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர். எதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
அதேசமயம் விக்ரம் படம் இன்னும் சில நாள்களில் வெளியாகவிருப்பதால் படத்தின் சிறப்பு காட்சியை காண்பதற்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் புதிய ப்ரோமோ வெளியானது. அதில் பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் கமல் நண்பர்களாக நடித்த யூகிசேது, ரமேஷ் அரவிந்த், ஜெயராம், ஸ்ரீமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!
இந்த ப்ரோமோவானது, பஞ்ச தந்திரம் படத்தில் கமலும் அவரது நண்பர்களும் ஃபோனில் பேசுவது போன்றே உருவாக்கப்பட்டிருந்தது.
புதிய ப்ரோமோவை உருவாக்கியிருந்த லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் வெறித்தனமான ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டார் எனவும், படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனவும் கூறி ப்ரோமோவுக்கு பலத்த வரவேற்பை அளித்தனர். மேலும், க்ரியேட்டிவாக யோசித்த லோகேஷ் கனகராஜுக்கும் அவரது டீமுக்கும் தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR