கொரோனா சூழல் காரணமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் தள்ளிப்போய் வருகின்றன. இந்த நோய் தொற்று காரணமாக படப்பிடிப்புகளையும் சரியான நேரத்தில் நடத்த முடியாமல் தள்ளிப் போகின்றன. சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு தள்ளிப் போய் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. மேலும் பல நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் உள்ளது.  சிலர் இதன் காரணமாக ஓடிடி-யில் வெளியிட பிளான் செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | டாப் ஹீரோக்கள் படங்களின் அப்டேட்களை அள்ளி தெறிக்கவிட்ட ஜி.வி பிரகாஷ்!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கிட்டத்தட்ட 110 நாட்களுக்குப் பின்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பினை விரைந்து முடிப்பதற்காக கமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மார்ச் 14-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 



அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படமும் நீண்ட நாட்களாக தயாரிப்பிலேயே இருந்து வருகிறது. இப்படத்தில் விக்ரம் பலவிதமான கெட்டப்புகளில் இருப்பது போன்று டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் மே மாதம் 26ஆம் தேதி வெளியாகும் என்று கூறபடுகிறது. அதே தேதியில் கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் படமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  படத்திற்காக கடினமாக உழைக்கும் இரு நடிகர்களின் படமும் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கோப்ரா படம் குறித்த அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.



மேலும் படிக்க | மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR