மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் - விஜய் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 5, 2022, 04:27 PM IST
  • லோகேஷ் கூட்டணியில் மீண்டும் விஜய்.
  • விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.
  • பீஸ்ட் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்? title=

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் பொங்கல் பண்டிகையயையொட்டி வெளியான அதிரடி திரைப்படம் மாஸ்டர்.  இந்த திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர்.  மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஜெரெமையா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | "தளபதி 66" அரசியல் சார்ந்த படமா? இயக்குனர் வம்சி விளக்கம்!

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.  கொரோனா காலத்தில் அனைவரும் துவண்டு இருந்த நேரத்தில் இந்த படம் பலருக்கும் ஒரு எனர்ஜி பூஸ்டராக அமைந்திருந்தது.  அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.  இந்தப் படம் சமூக அவலங்களை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக அமைந்திருந்தது.  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த தகவல் விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  இப்படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்துப்பாடல் பல மில்லியன் பார்வைகளை பெற்று டாப் ட்ரெண்டிங்காக உள்ளது.  இந்த படத்தைத் தொடர்ந்து 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.  இந்த படத்தின் மூலம் விஜய் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தற்போது லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.  

மேலும் படிக்க | நெய்வேலி செல்பி வெளிவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு! என்ன நடந்தது அன்று?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News