பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம் கன்னட நடிகர் லோகேஷ் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் அஞ்சலி தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளம் கன்னட நடிகர்:


கர்நாடக மாநிலத்திலுள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த இளம் நடிகர், லோகேஷ். இவர், சாம்ராஜ்நகர், குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள தொடுப்பூரை எனும் பகுதியில் வசித்து வந்தார். இவர் பல குறும்படங்களிலும் சில கன்னட படங்களில் குணச்சித்த்ரிர கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நடிகர், சில நாட்களுக்கு முன்புதான் தனக்கென்று புதிதாக ஒரு பைக்கை வாங்கியுள்ளார். 


பைக் வாங்கியதையடுத்து, நடிகர் லோகேஷ் கடந்த வெள்ளிக்கிழமையன்று பைக் எடுத்துக்கொண்டு பயணம் செய்ய புறப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பயணத்தின் போது எடுத்த வீடியோக்களை ரீல்ஸாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து கடந்த நேற்று (ஜூலை 29) அதிகாலை 2.30 மணியளவில் தன் சொந்த ஊரான தொடுப்பூருக்கு சென்றுள்ளார். அதற்காக பெங்களூரு-மைசூரு விரைவு நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளார். 


மேலும் படிக்க | நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக்..! ஷாக்கில் ரசிகர்கள்..!


விபத்து:


சொந்த ஊருக்கு பயணம் செய்த பயணம் செய்த லோகேஷின் பைக் காலை 5 மணியளவில்  விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய வந்தது. பெங்களூரு-மைசூரு விரைவு நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள மாண்டியா மாவட்டம் எலியூரில் இவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழியாக சென்றவர்கள் யாரோ ஒரு இளைஞர் கை-கால்கள் துண்டான நிலையில் ஒருவர் இறந்து கிடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தியதில், கார் மோதி லோகேஷுக்கு விபத்து நடந்ததும் அந்த காரின் பதிவு எண்ணும் கிடைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட பெங்களூர்-மைசூரு விரைவு நெடுஞ்சாலையில் இதுவரை 100க்கும் மேறபட்டவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இங்கு மட்டும் மொத்தம் 300க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 


ரசிகர்கள் சோகம்..


கன்னட திரையுலகில் சில நாட்களுக்கு முன்னர்தான் புனீத் ராஜ்குமார் என்ற இளம் நடிகர் சாலை விபத்தில் தனது காலை இழந்தார். இதே போல தற்போது ஒரு இளம் நடிகரையும் கன்னட திரையுலகம் இழந்துள்ளது. இதனால் அத்திரையுலக நட்சத்திரங்களும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 


மேலும் படிக்க | Leo Update: யார் இந்த ஆண்டனி தாஸ்..? வெளியானது க்ளிம்ஸ் வீடியோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ