Cinema News Updates: தனது வரவிருக்கும் "கர்ணன்" (Karnan) திரைப்படத்தின் டீஸர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) வெளியானது. மாலை 7.01 மணிக்கு வெளியான டீசர் இணையத்தில் புயலைக் கிளப்பியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டீசர் வெளியான 3 மணி நேரத்தில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்தனர். அத்துடன் அந்த டீசரை மேலும் பார்க்க விரும்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஏனென்றால், பல ஒரே நேரத்தில் பார்த்ததால், ஏற்பட்ட நெரிசலில் டீசரை பார்க்க முடியவில்லை. 



"பரியேரம் பெருமாள்" (Pariyerum Perumal) புகழ் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கிய தனுஷின் 41 வது திரைப்படமான "கர்ணன்" உலகளவில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும். படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. சாதாரண மனிதர்களின் உரிமைகளுக்காக போராடும்போது கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்களைச் சுற்றி படத்தின் கதை நகருகிறது எனத்தகவல். 


"கர்ணன் படத்தை கலைப்புலி எஸ் தானு (Kalaipuli S Thanu) தயாரிக்கிறார். தனுஷ், ராஜீஷா விஜயன், லால், அஷாகம் பெருமாள், லட்சுமிப்ரிய சந்திரமவுலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் கவுரி ஜி கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர். 


ALSO READ | ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' Teaser வெளியீடு!


இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) . கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக தாமதமானாலும், கர்ணனின் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்ணன் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி உலகளவில் திரைக்கு வருகிறது.


இதற்கிடையில், தனுஷ் (Dhanush) படப்பிடிப்பில் மிகவும் பிசியாக உள்ளார். விரைவில் அவர் நடித்த தமிழ் கேங்க்ஸ்டர் படமான ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) நெட்ஃபிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியிடப்படவிருக்கிறது. ஜிகார்த்தண்டா மற்றும் பேட்ட போன்ற பிரபல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். படம் தியேட்டரில் ரிலீஸாக வேண்டும் என பலரின் கருத்தாக இருந்தது. ஆனால் அது கொரோனா தொற்றுநோய் காரணமாக நடக்கவில்லை.


ALSO READ | மனதைக் கவரும் முதல் விமர்சனத்தை பெற்றது தனுஷின் 'கர்ணன்'


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR