அட்ரா மேளத்த!! தேனிசை தென்றல் தேவாவின் குரலில் கர்ணன் படத்தின் பாடல்-2 வெளியானது!

ஏற்கனவே கர்ணன் படத்தின் முதல் பாடலான "கண்டா வர சொல்லுங்க" (Kandaa Vara Sollunga) பாடல் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 2, 2021, 07:30 PM IST
  • கர்ணன் படத்தின் முதல் பாடலான "கண்டா வர சொல்லுங்க" (Kandaa Vara Sollunga) பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  • கர்ணன் (Karnan) திரைப்படத்தின் இரண்டாம் பாடல் இன்று வெளியானது.
  • "கர்ணன்" ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு (Kalaipuli S Thanu) அறிவித்துள்ளார்.
அட்ரா மேளத்த!! தேனிசை தென்றல் தேவாவின் குரலில் கர்ணன் படத்தின் பாடல்-2 வெளியானது!

Karnan Movies Updates: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கர்ணன் (Karnan) திரைப்படத்தின் இரண்டாம் பாடல் இன்று வெளியானது. தேனிசை தென்றல் தேவாவின் குரலில் வெளிவந்துள்ள, இந்த பாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கர்ணன் படத்தின் முதல் பாடலான "கண்டா வர சொல்லுங்க" (Kandaa Vara Sollunga) பாடல் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமான "கர்ணன்" ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு (Kalaipuli S Thanu) அறிவித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ்-கு ஜோடியாக நடிக்கிறார். நடிகர் லால், காமெடி நடிகர் யோகிபாபு உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயண் (Santhosh Narayanan) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' Teaser வெளியீடு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News