நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல்! வெளியானது வீடியோ ப்ரூஃப்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்து வருகிறது. 

Last Updated : Feb 20, 2020, 03:21 PM IST
நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல்! வெளியானது வீடியோ ப்ரூஃப்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்து வருகிறது. 

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என கூறி கருணாஸ் அவர்களின் முக்குளதேவர் புலிப்படை அமைப்பு காவல் நிலையில் புகார் அளித்திருந்தது.

இதற்கு காரணத்தை தெரிவித்த அமைப்பு இப்படம் 1991ஆம் ஆண்டு நடந்த கொடியங்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி உருவாகி வருவதாக திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி ஆகிய மாவட்டங்களில் நடந்து வரும் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பேசுவதாக ஒரு வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாலிபர், எங்கள் சமுதாயத்தை பற்றி அவதூறாக ஏதேனும் திரைப்படம் எடுத்தால் தலை இருக்காது. வெட்டிக்கொலை செய்வோம் என்று நடிகர் தனு‌‌ஷ், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளார்.

தற்போது அந்த வாலிபரை போலீஸ் தேடி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

More Stories

Trending News