ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' Teaser வெளியீடு!

நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கர்ணன்'. இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கர்ணன் திரைப்பட தயாரிப்பாளர் தாணு டீசர் வெளியிட்டுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 31, 2021, 04:47 PM IST
  • தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ்
  • தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட டீஸர் தேசிய அளவில் வைரலாகிறது
  • தாணுவுக்கு நன்றி சொல்கிறார் தனுஷ்
ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' Teaser வெளியீடு!

புதுடெல்லி: நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கர்ணன்'. இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கர்ணன் திரைப்பட தயாரிப்பாளர் தாணு டீசர் வெளியிட்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தை 'பரியேறும் பெருமாள்' திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். நடிகர் லால், காமெடி நடிகர் யோகிபாபு உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படம் தொடர்பாக இயக்குநர் மாரிதாஸ்  ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "வாள் தூக்கி நின்னான் பாரு, வந்து சண்டபோட்ட எவனும் இல்ல" என்று குறிப்பிட்டு, பட ரிலீஸ் தேதி தொடர்பான டீஸரை வழங்குவதில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #KarnanTeaser என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்த டீஸரை ஒரு மணி நேரத்தில் 3.6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.  தனுஷ், தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் (Super Star) ரஜினிகாந்தின் (Rajinikanth) மருமகன் தனுஷ், சிறந்த நடிகர் மற்றும் பாடகர். அவரது ‘வொய் திஸ் கொலைவெறி’ (Why This Kolaveri Di) பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது.

Also Read | ரஜினியின் எந்திரன் திரைப்படம் தொடர்பாக Director சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News