தமிழ் திரை உலகில் மிக வித்தியாசமான மற்றும் தனித்துவமான படங்களை எடுக்கும் இயக்குனர்களில் இயக்குனர் பி.எஸ். மித்ரனுக்கு தனி இடம் உள்ளது. 'இரும்புத்திரை’ 'ஹீரோ' போன்ற படங்கள் இவர் பெயர் சொல்லும் வகையில் அமைந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மித்ரன் இப்போது நடிகர் கார்த்தியுடன் இணைகிறார். நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர். அவருக்கான தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது.


கார்த்தி (Actor Karthi) நடிக்கவிருக்கும் படத்திற்கான முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது கார்த்தியின் 22 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) இப்படத்திற்கு இசை அமைக்கிறார். 'சர்தார்' என்ற இப்படத்தின் தலைப்பு மோஷன் போஸ்டருடன் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இப்படத்தில் ராஷி கன்னா மற்றும் ராஜிஷா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.


ALSO READ: கவர்ச்சிக்கு மாறிய தனுஷ் பட நடிகை; ரசிகர்கள் அதிர்ச்சி


பிரின்ஸ் பிக்சர்ஸ் என்ற பேனரின் கீழ், எஸ். லட்சுமன் குமார் அளிக்கும் நிதி உதவியோடு இந்த படம் தயாரிக்கப்படும். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஜார்ஜ் சி வில்லியம்ஸ் கையாள்கிறார். எடிட்டிங் பணிகளுக்கான பொறுப்பு ரூபெனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் ​​ஜூலை 16 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நடிகர் கார்த்தி இதற்கு முன்னர், சுல்தான் படத்தில் காணப்பட்டார். இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கினார். இவர் இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோவை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandana) நடித்தார்.


ALSO READ: D44-ல் மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத்: விரைவில் படப்பிடிப்பு துவக்கம், ஆவலில் ரசிகர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR