D44-ல் மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத்: விரைவில் படப்பிடிப்பு துவக்கம், ஆவலில் ரசிகர்கள்

தனுஷின் '3' படத்தில்தான் அனிருத் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது முதல் தனிப்பாடலான 'வொய் தில் கொலவெறி டி’ பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமானது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 5, 2021, 06:28 PM IST
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள் தனுஷ் மற்றும் அனிருத்.
  • டி 44 படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
  • படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
D44-ல் மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத்: விரைவில் படப்பிடிப்பு துவக்கம், ஆவலில் ரசிகர்கள் title=

Kollywood News: ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தனுஷ் மற்றும் இசையமைபாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகிய இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். தனுஷ், அனிருத் ஜோடியை ரசிகர்கள் DnA என ஆசையாக குறிப்பிடுவது வழக்கம். 

6 ஆண்டுகளுக்குப் பிறகு, இருவருன் தனுஷின் 44 ஆவது படத்திற்காக மீண்டும் இணைகிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், 2020 ஆம் ஆண்டில் இந்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.

தனுஷ் (Dhanush) மற்றும் அனிருத்தின் 15 வினாடி வீடியோவை அப்போது தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்தது. ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த வீடியோவுக்கு ‘தே ஆர் பேக்’ என தலைபிடப் பட்டது. 

தனுஷின் '3' படத்தில்தான் அனிருத் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் (Tamil Cinema) அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அவரது முதல் தனிப்பாடலான 'வொய் தில் கொலவெறி டி’ பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த பாடல் மிக அதிகமாக வைரல் ஆகி, அனைத்து பதிவுகளையும் முறியடித்தது.

இன்றளவிலும், இந்த பாடல், யூடியூப் மற்றும் பிற தளங்களில் மிக அதிகமாக கேட்கப்பட்ட மற்றும் பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக உள்ளது. 

ALSO READ: Dhanush 43: தனுஷ் 43 படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

இப்போது 'D44' பற்றிய பரபரப்பான செய்தி என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என்பதுதான். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். அவர்களுடனான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், எனினும், எந்த தகவல்களும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷின் 'யாரடி நீ மோகினி', 'குட்டி' மற்றும் 'உத்தம புத்திரன்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய மித்ரன் ஜவஹர் இப்படத்தை இயக்குகிறார்.

'டி 44' படத்தின் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனுஷ் மற்றும் அனிருத் (Anirudh) ஜோடி இப்படம் மூலம் மீண்டும் இணையவுள்ளதால், ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலாக காத்திருக்கிறார்கள்.

ALSO READ: விரைவில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ்; வெளியானது முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News