சூரரைப் போற்று திரைப்படம் அனைவரின் இதயங்களையும் தொட்டு, சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. வசூலிலும் சாதனை புரிந்த நடிகர் சூர்யாவின் இந்த திரைப்படம், கொரோனா பாதிப்பினால் திரையரங்குகளில் வெளியிடப்பட முடியாமல் போனது. ஆனால், கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று, அமேசான் பிரைம் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது.
தற்போது, சூரரைப் போற்று (SooraraiPottru) திரைப்படம் மற்றுமொரு சாதனையை பதிவு செய்துள்ளது.
திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்டுப் பயலே (KaatuPayale) என்ற பாடலை யூடியூபில் (YouTube) ஒரு கோடி பேருக்கு மேல் பார்த்திருக்கின்றனர். இதற்கு முன் எந்தவொரு திரைப்படப் பாடலும், வெளியாகிய ஒரு மாதத்திற்குள் இந்த சாதனையை செய்த்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் (G.V.Prakash) இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்டுப் பயலே பாடலை யூடியூபில் (YouTube) ஒரு கோடி பேருக்கு மேல் பார்த்திருக்கின்றனர் என்று நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் டிவிட்டரில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.
Video song of #KaatuPayale from #SooraraiPottru hits 1 Crore views on YouTube !@Suriya_offl @gvprakash #Suriya pic.twitter.com/HPMZqbAWxO
— Suriya Fans Trends ™ (@Suriya_Trends) December 4, 2020
இயக்குனர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். திரைப்படத்தின் முக்கிய கதாபத்திரங்களாக சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடித்துள்ள அனைவரின் கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அதோடு, நேர்த்தியான கதையம்சம், நேர்மறையான கதாபாத்திரங்கள் என பல பரிமாணங்களிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது சூரரைப் போற்று திரைப்படம்.
தற்போது காட்டுப் பயலேபாடலை யூடியூபில் (YouTube) ஒரு கோடி பேருக்கு மேல் பார்த்த சாதனையையும் புரிந்து, மக்கள் சூரரைப் போற்று திரைப்படத்தை போற்றி வருகிறார்கள் என்பது புரிகிறது.
Also Read | வில்லனே பார்த்து மலைக்கும் சூப்பர் சூரர் சூர்யா @சூரரைப் போற்று!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR