Sadar 2 Movie Update: கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் திரைப்படத்தில் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணியை கூறிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வேறு கதையை வைத்து எடுக்கப்படுகிறது. இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கார்த்தி:
தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் ஆக்‌ஷன் நடிகராக அதே நேரத்தில் காமெடி , ரொமான்ஸ், நகைச்சுவை என எல்லா வகைகளிலும் ரசிகர்களை கவரும் வகையில்  நடித்து வரும் நடிகர் கார்த்தி (Actor Karthi). பருத்திவீரன் படத்தில் நடிகராக அறிமுகமான கார்த்தி, "இதுவா இவரது" முதல் படம் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு நடிகராக மாறினார். மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று படம் கார்த்தியை முழுவதும் மாஸாக மாற்றியது. இதன் பின் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வனின் வந்தியத் தேவன் கதாபாத்திரம் கார்த்தியின் முழு நடிப்பாற்றலையும் ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்தது.


மேலும் படிக்க | ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள Deadpool & Wolverine படத்தின் ட்ரைலர்!


சர்தார் திரைப்படம்:
இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சர்தார். இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய அளவில் சாதனை செய்தது. இந்த படத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் பாட்டில் வாட்டர் மற்றும் கேன் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் தீங்கு மற்றும் இதன் பின்னணியில் இருக்கும் கோடிக்கணக்கான வணிக அரசியல் ஆகியவை அப்பட்டமாக காட்டப்பட்டு இருந்தது. அதனுடன் இந்த படம் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.


சர்தார் 2 திரைப்படத்தின் அப்டேட்:
இந்நிலையில் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட்டான சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டாம் பாகமானது போதை விவகாரம் குறித்த கதை அம்சத்துடன் இருக்கயுள்ளது. மேலும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் மே மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்கும் என்றும், ஷூட்டிங் ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனுடன் கார்த்தியின் இத்தனை வருட துறைபயணத்தில் இல்லாத வகையிலான மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க | கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவர்! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ