கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவர்! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?

Ghilli Vijay Mother Janaki Sabesh : கில்லி படத்தில் நடித்த விஜய்யின் தாயார் அவரை விட வயதில் இளையவர் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Apr 23, 2024, 01:31 PM IST
  • கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தவர்
  • அவரை விட இத்தனை வயது சின்னவரா?
  • இவரது பெயர் ஜானகி சபேஷ்
கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவர்! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா? title=

Ghilli Vijay Mother Janaki Sabesh : விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம், ரீ-ரிலீஸிலும் தற்போது சக்கப்போடு போட்டு வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு தாயாராக நடித்தவர் விஜய்யை விட வயதில் சின்னவர் என்ற விஷயம் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

கில்லி திரைப்படம்:

மகேஷ் பாபு நடிப்பில் 2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம், கில்லி. இந்த படத்தில், இவருக்கு ஜாேடியாக பூமிகா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ் வில்லனாக வருவார். இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த இப்படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். இதையடுத்து, இப்படம் தமிழில் ‘கில்லி’ என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. 

2004ஆம் ஆண்டு வெளியான கில்லி படத்தில், விஜய் கபடி வீரனாக கதாநாயகன் தோற்றத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இப்படம், 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான போதே வசூலில் சக்கை போடு போட்டு, 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது. மொத்தம் ரூ.50 கோடி கலக்ஷனையும் தாண்டியது. 

கில்லி விஜய்யின் தாயார்..

தெலுங்கு படத்தின் ரீ-மேக் ஆக இருந்தாலும், கில்லி படத்தில் பல கவனிக்கத்தக்க அம்சங்கள் இருந்தன. அதில் ஒன்று, விஜய்யின் அம்மாவாக நடித்தவரின் வெகுளித்தனமான நடிப்பும், தங்கையாக நடித்தவரின் குறும்பான டைலாக்குகளும்தான். இதில், விஜய்க்கு தாயாக நடித்திருந்தவரின் வயது, ஜானகி கணேஷ். தமிழ் மட்டுமன்றி சில தெலுங்கு மொழி படங்களிலும் இவர் பல ஹீரோயின்களுக்கும் ஹீரோக்களுக்கும் தாயாக நடித்திருக்கிறார். 

கில்லி படத்தில் “காலையில் எழுந்தவுடன் சாமி கும்பிட வேண்டும், அது நமக்கு நல்லது. இன்னோன்னு குளிக்கனும், அது சுத்தி இருக்க எல்லாருக்கும் நல்லது” என்று இவர் கூறும் டைலாக் மிகவும் பிரபலம். வீட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தாலும் தனது பிள்ளைக்கு ஆதரவாக பேசும் அம்மாவாக, அனைத்து தமிழ் தாய்மார்களையும் திரையில் காண்பித்திருப்பார். 

கில்லி படத்தில் நடித்த போது வயது..

கில்லி படத்தில் நடிகர் விஜய் பார்ப்பதற்குதான் காலேஜ் செல்லும் இளைஞர் போல இருந்தார். ஆனால், இப்படத்தில் நடித்த போது அவருக்கு வயது சுமார் 30 ஆகும். இவரது பிறந்த தேதி, 1974-ஜூன் 22. இதுவே, இவருக்கு தாயாக நடித்த ஜானகி கணேஷின் பிறந்த தேதி, 1974-செப்டமர் 23 ஆகும். எனவே, விஜய் தன்னை விட 3 மாதம் இளையவருக்கு மகனாக நடித்துள்ள விவரம் தற்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | த்ரிஷாவுக்கே tough கொடுக்கும் பாட்டி! அப்படிப்போடு பாடலுக்கு அப்படியொரு குத்து..

ஜானகி கணேஷ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்..

கில்லி படம் மட்டுமன்றி, ஜானகி கணேஷ் தமிழில் இன்னும் சில ஹீரோக்களின் படங்களிலும் அவர்களுக்கு தாயாக நடித்திருக்கிறார். ஆயுத எழுத்து, வல்லவன், சிங்கம் உள்ளிட்டவை அதில் சில படங்களாகும். தற்போது இவர் கதை சொல்லியாக இருக்கிறார். மேலும், இணையதளத்தில் அடிக்கடி வீடியோக்களையும் பதிவிட்டு செலிப்ரிட்டியாகவும் வலம் வருகிறார். 

கில்லி படத்தின் வசூல்..

கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரீ-ரிலீஸாக இருந்தாலும் இப்படம் பெரிய அளவில் ப்ரமோஷன்கள் செய்யப்படவில்லை. ஆனால், முதல் நாள் முதல் காட்சிக்கே ஏதோ விஜய்யின் புதிய படம் ரிலீஸாவது போல ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத்தொடங்கினர். தமிழகத்தில் மட்டுமன்றி அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. கடந்த 20ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளிலேயே ரூ.10 கோடி கலக்ஷனை தாண்டிருக்கிறது. வரும் ஞாயிறு வரை ஒரு சில தியேட்டர்களில் இப்படத்தின் முன்பதிவு நிறைவு பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க | 20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News