கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரூபஸ்ரீ பல்லவி என்ற பெயரில் தீபாவை கார்த்தியிடம் பேச வைத்து அவனை ஏமாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, தீபா பூஜையறையில் முருகன் சிலை முன்னாடி நின்று எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என வருத்தப்பட்டு வெளியே வர மைதிலி மனசுக்குள் இவ்வளவு காதலை வச்சிட்டு ஏன் மறைக்கிற என்று கேட்க தீபா இந்த கல்யாணம் முறையில்லாமல் நடந்தது, அதனால் அவங்களுக்கும் மனவருத்தம் இருக்கும்ல என்று சொல்லி கொண்டிருக்க அப்போது கார்த்திக் வெளியே வருகிறான். 


மேலும் படிக்க | மகளுடன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!


மேலும் கார்த்திக் ஊருக்கு கிளம்ப எல்லாரும் ஒன்று சேர்ந்து அவனை வழியனுப்ப தர்மலிங்கம் ஒரு நிமிஷம் தம்பி என தடுத்து நிறுத்துகிறார், தீபாவை தரதரவென கோவில் ஒன்றிற்கு அழைத்து சென்று நீதா அவர் வேணான்னு முடிவு பண்ணிட்டல, அப்புறம் அவர் கட்டின தாலி எதுக்கு உன் கழுத்துல இருக்கனும் என கேட்டு ஷாக் கொடுக்கிறார். 



மேலும் தாலியை கழட்டி உண்டியலில் போட்டு விடு என்று சொல்ல தீபா தாலியை பார்த்து என்னால முடியாது என்று சொல்லி அங்கிருந்து ஓடி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | மீண்டும் நடிக்க தயாரான விஜய் ஆண்டனி..! ‘ஹிட்லர்’ பட போஸ்டர் வெளியீடு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ