'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பீஸ்ட்'. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்கத்திலிருந்து நடிப்புக்கு வந்துள்ள இயக்குநர் செல்வராகவன், திரையில் தோன்றவுள்ள முதல் படம் இதுதான்.  ஓர் இயக்குநராக ரசிகர்கள் மத்தியில் தனிச் செல்வாக்கு கொண்டுள்ள செல்வராகவன்,  இப்படத்தில் நடிகராக என்ன செய்துள்ளார் எனக் காண ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.


மேலும் படிக்க | பிரபாஸின் அமெரிக்க பயணம் - ஹாலிவுட் படத்திற்கா இல்லை அறுவை சிகிச்சைக்கா?


ப்ளாக் ஹியூமருக்கு முக்கியத்துவம் கொடுத்து படமெடுத்து வருபவர் இயக்குநர் நெல்சன். மறுபுறம் நடிகர் விஜய்யோ இயல்பாகவே காமெடியில் கலக்கக்கூடியவர். இதனால், விஜய்- செல்வராகவன் காம்போவின் நடிப்புக்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புபோல விஜய்- நெல்சன் காமெடிக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் யோகிபாபுவும் இதில் உள்ளதால் இப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.


                                                              


விஜய்யின் 'பீஸ்ட்'  வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கு மறுநாள் கன்னட நடிகர் யஷ் நடித்துள்ள 'கேஜிஎஃப்-2' படம் வெளியாகவுள்ளது. பான்- இந்தியா ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால் புதிய போட்டியும் உருவாகியுள்ளது. விஜய்யின் 'பீஸ்ட்' முன்கூட்டியே வெளியாவதால் 'கே.ஜி.எஃப்-2' படத்துக்கு தியேட்டர் ஒதுக்கீடு செய்வதில் சிக்கலும் எழுந்துள்ளது.


இந்நிலையில் தமிழகத்தின் குறிப்பாக, சென்னையின் ஒரு சில திரையரங்குகளில் யஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எஃப்-1' திரைப்படத்தைத் தற்போது வெளியிட்டுள்ளனர். 'பீஸ்ட்' இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதால் எந்தத் தியேட்டர்களிலும் புதிதாக பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படவில்லை. பெரும்பாலான திரையரங்குகளில் ஏற்கெனவே ரிலீஸ் ஆன 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் பிற மொழிப்படங்களே ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான் 'கே.ஜி.எஃப்-1' படத்தை சில திரையரங்குகள் கையில் எடுத்துள்ளன.


மேலும் படிக்க | தொடங்கியது ஏகே 61 ஷூட்டிங்... பிரைவேட் ஜெட்டில் பறந்த அஜித்


விரைவில் 'கே.ஜி.எஃப் -2' படம் வெளியாகவுள்ளதால் இதற்கிடையே அதன் முதல் பாகத்தை வெளியிட்டால் ரசிகர்களிடம் அதற்கு வரவேற்பு இருக்கும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 'கே.ஜி.எஃப் - 1' படத்தை இதுவரை பார்க்காதவர்கள் தற்போது வெளியாகியிருக்கும் அப்படத்தைக் பார்த்தபின் 'கே.ஜி.எஃப்- 2' படத்தைப் பார்க்கச் சென்றால் படத்துடன் தங்களை ஈசியாக கனெக்ட் செய்துகொள்ளவும் முடியும்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR