தொடங்கியது ஏகே 61 ஷூட்டிங்... பிரைவேட் ஜெட்டில் பறந்த அஜித்

அஜித் நடிக்கும் 61ஆவது படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.

Last Updated : Apr 8, 2022, 12:16 PM IST
  • ஏகே 61 ஷூட்டிங் தொடக்கம்
  • ஹைதராபாத் சென்ற அஜித்
  • ப்ரைவேட் ஜெட்டில் சென்ற அஜித்
 தொடங்கியது ஏகே 61 ஷூட்டிங்... பிரைவேட் ஜெட்டில் பறந்த அஜித் title=

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான வலிமை ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறினர்.

மேலும், வலிமை படத்தை அஜித் சொல்லித்தான் வினோத் எடுத்தார். அதனால்தான் படத்தின் திரைக்கதை போன்ற விஷயங்கள் சொதப்பிவிட்டன என்ற தகவல்கள் வெளியாகின.

Valimai

இதற்கிடையே அஜித்தின் 61ஆவது படத்தையும் வினோத்தே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளில் அவர் மும்முரமாக இறங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தற்போது எடுக்கப்படவிருக்கும் இந்தக் கதையைத்தான் அஜித்திடம் வினோத் முதலில் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: ‘அஜித்-61’ : கதை பிறந்த பின்னணி இதுதான்! 3ஆவது முறையாக க்ரீன் சிக்னல்!

இந்தப் படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பார் என பேசப்படுவதால் வினோத்தின் உண்மையான திரைக்கதை வலிமை இப்படத்தில்தான் தெரியவரும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Vinoth

இந்நிலையில், அஜித்தின் 61ஆவது படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியிருக்கிறது. இதற்காக அஜித் பிரைவேட் ஜெட்டில் ஹைதராபாத்துக்கு நேற்று சென்றார். அதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | ரூ.1000 கோடி வசூலைக் குவித்த RRR..! கடுப்பில் ஆலியா பட்! என்ன காரணம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News