பீஸ்ட் தியேட்டர்களை காலி செய்யும் கேஜிஎப் 2
பீஸ்ட் அதிக தியேட்டர்களில் ரிலீஸான நிலையில், தற்போது கேஜிஎப் 2 படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளையதளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு அமோக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தின் முதல் ஷோ நிறைவடைந்ததும், வெளியான ரிவ்யூக்களில் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கூறப்பட்டது. தமிழ்நாடு, கேரளா என படம் வெளியான அனைத்து பகுதிகளிலும் அதே ரியாக்ஷன்.
மேலும் படிக்க | 'KGF-2' பட எடிட்டர் ஒரு சிறுவனா?! மிரண்டு பார்க்கும் திரையுலகம்!
முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டி, அதே பழைய ஸ்கிரிப்டையே ஒட்டிவெட்டி படமாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்தனர். படம் வெளியாவதற்கு முன்பு, இப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என காத்திருந்த படக்குழுவுக்கு, இது ஏமாற்றமாக அமைந்துள்ளது. வசூல் ரீதியாக பார்க்கும்போது இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அதிக தொகையை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதிக தியேட்டர்களில் ரிலீஸானதால், பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ்டரின் வசூலை, பீஸ்ட் முறியடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அதேநேரத்தில் கேஜிஎப் 2 திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸான திரைபடம், தமிழகத்தில் 250 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது கேஜிஎப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருப்பதால், இன்று ஒரே நாளில் கூடுதலாக 350 தியேட்டர்களில் கேஜிஎப் 2 படம் திரையிடப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை நாளை மேலும் அதிகரிக்க உள்ளது. அதாவது இன்னும் 100 தியேட்டர்களில் கேஜிஎப் படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர். திரும்பிய திசையெல்லாம் கேஜிஎப் 2 படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும், வசூலும் படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் நெல்சன் திலிப்குமார் மற்றும் விஜயை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | தளபதி 66-ல் சரத்குமாரின் ரோல் என்ன? இதோ அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR