உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமின்றி தமிழ் சினிமாவே தற்போது 'விக்ரம்' படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறது.  இந்த பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படம் கமல்ஹாசனின் அறுபது வருட திரையுலக வாழ்க்கையில் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் மிகப்பெரிய தனித்துவத்தையும், வெற்றியையும் பிடித்திருக்கிறது.  கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கமல்ஹாசனின் படங்கள் திரைக்கு வராமல் இருந்த நிலையில் இந்த படம் அவருக்கு சிறந்த கம்பேக்காக அமைந்திருக்கிறது.  தற்போது நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி இணைந்து நடிக்கும் 'எஸ்கே21' என்கிற 'ஆர்கேஎஃப் 51' படத்தையும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'ஆர்கேஎஃப் 54' உள்ளிட்ட பல படங்களையும் தயாரித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும்  படத்தினை இயக்குனர் பிரசாந்த் முருகேசன்  இயக்கப்போவதாக சில செய்திகள் வெளியாகி வருகின்றன.  இயக்குனர் பிரசாந்த் முருகேசன் முதன்முதலாக சசிகுமாரை வைத்து தனது முதல் படமான 'கிடாரி' படத்தை இயக்கினார்.  இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு படம் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றிருந்து .  அதனைத்தொடர்ந்து இவர் ரம்யா கிருஷ்ணனை வைத்து குயின் என்கிற வெப் தொடரை இயக்கி, அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த வெப் தொடர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது.



மேலும் படிக்க | விஜய்யை அட்டாக் செய்தாரா தனுஷ்! சர்ச்சையை கிளப்பிய பேச்சு!


இந்த 'ஆர்கேஎஃப் 51' ஒரு சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துருவை கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிக்கப்போகும் மற்ற நடிகர்கள் மற்றும் படத்தின் பெயர் இன்னும் படம் சம்மந்தமான இதர விவரங்களை விரைவில் படக்குழு  அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.  உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கழக தலைவன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.



மேலும் படிக்க | விருமன் மதுர வீரன் பாடலை முதலில் பாடியது ராஜலட்சுமியா? கிளம்பும் புதிய சர்ச்சை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ